முதல் வலது-கை ட்ரைவ் சந்தையாக புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை பெறும் இந்தியா!! அறிமுக தேதி அறிவிப்பு!

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் காரின் இந்திய அறிமுகம் தகவல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அதனை பற்றியும் இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ கார் இதுதானா

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் க்ரான் கூபே காரின் நீண்ட-வீல்பேஸ் வெர்சனாக வெளிவரும் இந்த புதிய கார் இந்திய சந்தையில் வருகிற 2021 ஜனவரி 21ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியா 3 சீரிஸ் வரிசையில் நீண்ட-வீல்பேஸ் வெர்சன் காரை பெறும் முதல் வலது-கை ட்ரைவிங் கொண்ட சந்தையாக விளங்கவுள்ளது.

110மிமீ-ல் நீண்ட வீல்பேஸ் மட்டுமில்லாமல் மொத்த பரிமாண அளவுகளில் வழக்கமான 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் காரை விட 120மிமீ நீளமானதாகவும் சற்று உயரமானதாகவும் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது. மற்றப்படி தோற்றத்தில் இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

உட்புறத்திலும் அதேதான் ஓட்டுனருக்கும் முன் இருக்கை பயணிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது. ஆனால் பின் வரிசை இருக்கைகளில் அமரும் பயணிகள் சில மாற்றத்தை உணர்வார்கள். அதாவது கால்களை நன்கு மடக்கி நீட்ட கூடுதலாக இடம் இருக்கும்.

ஏனெனில் இந்த பகுதி இந்த புதிய பிஎம்டபிள்யூ காரில் 43மிமீ பெரியதாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நன்கு குஷின் வைக்கப்பட்ட இருக்கையில், எளிமையாக கண்ட்ரோல் செய்யும் விதத்திலான கதவுகள் வழியாக பின் இருக்கை பயணிகள் அமர்வார்கள்.

மற்றப்படி எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், பனோராமிக் சன்ரூஃப், கேபினை சுற்றிலும் விளக்குகள், பல நிலைகளை கொண்ட க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 8.8 இன்ச்சில் பிஎம்டபிள்யூவின் ஐட்ரைவ் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

அதேபோல் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் (258எச்பி) மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் (190எச்பி) என்ஜின் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. பரிமாண அளவுகளை பொறுத்த வரையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் மாடல்களுக்கு நடுவில் 3-சீரிஸ் கரான் லிமௌசைன் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ரூ.42.30 லட்சத்தில் இருந்து ரூ.49.30 லட்சம் வரையிலான விலைகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎம்டபிள்யூ செடான் காருக்கு விற்பனையில் டஃப் கொடுக்கக்கூடியவைகளாக மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ கார்கள் தற்சமயம் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன.

Most Read Articles
English summary
Launch of the new BMW 3 Series Gran Limousine, 21 January 2021 at 12.00 hrs.
Story first published: Tuesday, December 22, 2020, 1:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X