லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

லெக்சஸ் எல்சி500எச் ஸ்போர்ட்ஸ் கூபே ரக கார் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா தனது கீழ் செயல்படும், லெக்சஸ் பிராண்டின் கீழ் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டிலும் லெக்சஸ் பிராண்டில் உயர்வகை கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த நிலையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தை மெல்ல நிலைநாட்டும் விதமாக புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த வரிசையில் தற்போது லெக்சஸ் எல்சி500எச் என்ற புதிய ஸ்போர்ட்ஸ் ரக கூபே கார் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கார் வரும் 31ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

லெக்சஸ் எல்எஃப்ஏ கான்செப்ட் மாடலில் இருந்து டிசைன் தாத்பரியங்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு மிக அழகுற வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. லெக்சஸ் நிறுவனத்தின் பாரம்பரிய வடிவமைப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, கூர்மையான ஹெட்லைட்டுகளுடன் வசீகரமாக இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளன. 20 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் பெட்ரோல் மற்றும் மின் மோட்டார்களுடன் இயங்கும் ஹைப்ரிட் தொழில்நுட்பம் உள்ளது. இதில், 3.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் தொழில்நுட்பத்தில் செயல்படும் வி6 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 295 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

தவிரவும், இரண்டு மின் மோட்டார்களும் இணைந்து செயலாற்றும். இந்த மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். மொத்தத்தில் 354 பிஎச்பி பவரையும், 348 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. அதாவது, 3 ஸ்டெப் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் என இரண்டு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகைகளும் இணைந்து செயலாற்றும் விசேஷமான தொழில்நுட்பத்தை கொண்டதும் இதன் தனிச்சிறப்பாகும். இதனை மேனுவல் மோடில் வைத்து இயக்கும்போது 10 ஸ்பீடு கியர்பாக்ஸாக செயல்படும்.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

இந்த காரில் 2 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டது. உட்புறத்தில் பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 10.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

லெக்சஸ் எல்சி500எச் கார் இந்திய அறிமுக தேதி விபரம்!

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டிரைவிங் மோடுகள் ஆகிய தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இதன் நீளவாக்கிலான ஏசி வென்ட்டுகள் தனித்துவமான டிசைன் அமைப்பை பெற்றிருக்கிறது.


Most Read Articles
மேலும்... #லெக்சஸ் #lexus
English summary
Lexus LC 500h sports coupe car will be launched in India on 31 January 2020.
Story first published: Sunday, January 12, 2020, 14:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X