விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் லெக்ஸஸ் என்எக்ஸ் 300 ஹைப்ரீட் மாடலின் வேரியண்ட்களை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள விரிவாக இந்த செய்தியில் விளக்கியுள்ளோம். அவற்றை இனி பார்ப்போம்.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

என்எக்ஸ் 300எச் மாடலை லெக்ஸஸ் நிறுவனம் லக்சரி, எஃப் ஸ்போர்ட், எக்ஸ்க்யூசைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்று வேரியண்ட்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தொழிற்நுட்ப வசதிகளே வழங்கப்பட்டு வருகின்றன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இதில் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டாக எக்ஸ்க்யூசைட் ரூ.54.90 லட்சத்திலும், லக்சரி ரூ.59.90 லட்சத்திலும், எஃப் ஸ்போர்ட் அதிகப்பட்சமாக ரூ.60.60 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வித்தியாசத்திற்கு ஏற்றப்படி இதன் உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.

MOST READ: பருவமழை ஆரம்பமாக போது... மழைநீரால் ஏற்படும் வாகன பழுதுகளை தடுப்பது எப்படி...?

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

டிசைன் மாற்றங்களுடன் என்எக்ஸ் 300எச் மாடலின் இந்த மூன்று வேரியண்ட்களும், சோனிக் குவார்ட்ஸ், மெர்குரி க்ரே மைக்கா, க்ராஃபைட் ப்ளாக் க்ளாஸ் ஃப்ளாக், சோனிக் டைட்டானியம், ப்ளாக், ப்ளாஸிங் கார்னிலியன் காண்ட்ராஸ்ட், ரெட் மைக்கா க்ரிஸ்டல் ஷைன், ஸ்பார்க்லிங் மீட்டியோர் மெட்டாலிக் என்ற நிறத்தேர்வுகளையும் பெற்றுள்ளன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

எக்ஸ்க்யூசைட் மற்றும் லக்சரி வேரியண்ட்களுக்கு மட்டும் கூடுதலாக அம்பர் க்ரிஸ்டல் ஷைன் நிற தேர்வும், எஃப் ஸ்போர்ட் வேரியண்ட்டிற்கு வொய்ட் நோவா க்ளாஸ் ஃப்ளாக், லாவா ஆரஞ்ச் க்ரிஸ்டல் ஷைன், ஹீட் ப்ளூ காண்ட்ராஸ்ட் லேயரிங் என்ற நிறத்தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இவ்வாறு அதிகளவில் நிறத்தேர்வுகள் இந்த காருக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு காரணம் இதற்கு போட்டியாகவுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி, பிஎம்டபிள்யூ எக்ஸ்3, ரேஞ்ச் ரோவர் எவோக், ஆடி க்யூ5 மற்றும் வால்வோ எக்ஸ்சி60 மாடல்கள் 4-6 பெயிண்ட் தேர்வுகளை பெற்றிருப்பது தான்.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இதன் வேரியண்ட்களின் வெளிப்புறத்தில் முன்புற எல்இடி தொடர்ச்சியான வரிசையாக டர்ன் இண்டிகேட்டர்கள், டிஆர்எல்கள், மெமரி, பவர் அட்ஜெஸ்ட் & ஃபோல்ட் உடன் ஹீட்டட் ஓஆர்விஎம்கள், முன் மற்றும் பின்புறத்தில் எல்இடி ஃபாக் லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், பனோராமிக் ஃபிக்ஸ்ட் க்ளாஸ் ரூஃப் உள்ளிட்டவை உள்ளன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

அனைத்து வேரியண்ட்களும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்களை நிலையாக கொண்டிருந்தாலும் ஒவ்வொன்றிலும் சக்கரங்களில் டிசைன் வேறுப்பட்டுள்ளது. பெயிண்ட் தேர்வுகளுக்கு ஏற்ற நிறத்தில் வெளிப்புற கண்ணாடிகள் எக்ஸ்க்யூசைட் & லக்சரி வேரியண்ட்களில் வழங்கப்பட, எஃப் ஸ்போர்ட் வேரியண்ட்டில் மட்டும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்படுகிறது.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இருப்பினும் முரட்டுத்தனமான பம்பரையும், கருப்பு நிறத்தில் க்ரில்லையும் எஃப் ஸ்போர்ட் வேரியண்ட் பெற்றுள்ளது. என்எக்ஸ் 300எச் மாடலின் உட்புறத்தில் 60:40 என்ற விகிதத்தில் ஃபோல்டிங் ஆகக்கூடிய பின்புற இருக்கைகள், பவர்டு ஓட்டுனர் இருக்கை, ஹீட்டட் இருக்கைகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட், 4.2 இன்ச்சில் கலர் எம்ஐடி போன்றவை உள்ளன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இவை மட்டுமில்லாமல் க்ரூஸ் கண்ட்ரோல், டில்ட் & டெலிஸ்கோபிக் ஸ்டேரிங் அட்ஜெஸ்ட்மெண்ட், 2-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஈக்கோ/நார்மல்/ஸ்போர்ட் என்ற ட்ரைவிங் மோட்கள், பெடல் ஷிஃப்டர்கள், நாவிகேஷன் உடன் 10.3 இன்ச்சில் இன்போடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவையும் உள்ளன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

பயணிகளுக்கு ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வாகன ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், 8 காற்றுப்பைகள், வேகத்தை அறிந்து தானாக பூட்டிக்கொள்ளும் கதவுகள் போன்றவற்றுடன் எக்ஸ்க்யூசைட் வேரியண்ட் பின்பக்கத்தை பார்ப்பதற்கு கேமிராவையும், லக்சரி & எஃப் ஸ்போர்ட் வேரியண்ட்கள் 360 கோண கேமிராவையும் கூடுதலாக பெற்றுள்ளன.

விற்பனையில் உள்ள லெக்ஸஸ் என்எக்ஸ் 300எச் மாடலை பற்றிய முழு விபரங்கள் இதோ...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இதன் மூன்று வேரியண்ட்களிலும் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் ஹைப்ரீட் என்ஜின் அமைப்பு அதிகப்பட்சமாக 194 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles
மேலும்... #லெக்ஸஸ் #lexus
English summary
Lexus NX 300H variants wise explained
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X