அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

அமெரிக்க சந்தைக்கான மெக்லாரன் சப்ரே (sabre-பட்டாக்கத்தி) ஹைப்பர்காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

முன்னதாக இந்த டிசம்பர் மாத துவக்கத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த இந்த மெக்லாரன் ஹைப்பர்காரை பற்றிய விபரங்களை அமெரிக்காவை சேர்ந்த மெக்லாரன் பெவர்லி ஹில்ஸ் என்ற மெக்லாரனின் பிரதான டீலர்ஷிப் மையத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

முழுக்க அமெரிக்க சந்தைக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லிமிடேட் எடிசன் கார் அங்கேயும் வெறும் 15 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. மெக்லாரனின் புதிய புதிய யோசனைகளுக்கு அமெரிக்காதான் பெரிய அளவில் எந்த தடைகளையும் விதிப்பதில்லை.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

இதனால்தான் மெக்லாரன் சப்ரே அங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த 15 யூனிட்களில் ஒவ்வொரு யூனிட்டும் மெக்லாரன் சமூக செயல்பாடுகள் மூலமாக வடிவமைக்கப்படவுள்ளன. மெக்லாரன் சப்ரேவில் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 820 பிஎச்பி மற்றும் 820 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உதவியுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை அதிகப்பட்சமாக 351kmph வேகத்தில் இயக்க முடியும்.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

இதன் மூலமாக சப்ரே லிமிடேட் எடிசன் ‘வேகமான இரு-இருக்கை மெக்லாரன்' கார் என்ற பட்டத்தை சொந்தமாக்கவுள்ளது. புதிய மெக்லாரனின் முன்பக்கத்தில் என்ஜினிற்கு காற்று செல்லும் வகையில் துளைகள், காரின் மொத்த அகலத்தையும் கவர் செய்யும் வகையிலான ஸ்பாய்லர் மற்றும் பெரிய அளவில் பிரிப்பான் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

இவை மட்டுமின்றி, இரு நிறங்களில் பெயிண்ட், அகலமான ஃபெண்டர்கள், பட்டாம்பூச்சி வடிவிலான கதவுகள், இருபுறங்களிலும் பெரிய ஃபின்கள் மற்றும் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான பக்கவாட்டு சறுக்கு பேனல்கள், மையத்தில் பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் பெரிய டிஃப்யூஸர் போன்றவையும் சிறப்பம்சங்களாக இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க சாலைகளை கதிகலங்க வைக்கவுள்ள அடுத்த மெக்லாரன் கார் இதுதான்!!

காரின் உட்பக்கத்தை வெளிக்காட்டும் விதத்தில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலமாக காரின் கேபின் சிவப்பு மற்றும் கருப்பு என்ற இரு நிறத்தில் கார்பன் மற்றும் அல்காண்ட்ரா உள்ளீடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

Most Read Articles

மேலும்... #மெக்லாரன் #mclaren
English summary
Limited-edition McLaren Sabre hypercar debuts; to be sold exclusively in the US market
Story first published: Saturday, December 26, 2020, 21:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X