அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

2021 ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்களின் பட்டியலையே இப்பதிவில் காணலாம்.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

நடப்பு 2020ம் ஆண்டைப் போலவே வருகின்ற 2021ம் ஆண்டிலும் புதுமுக கார்கள் பல விற்பனைக்கு வரவிருக்கின்றன. கடந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்கள் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கியிருந்த காரணத்தால் அனைத்து நிறுவனங்களும் அதன் புதிய வாகனங்களைக் களமிறக்குவதில் சிக்கலைச் சந்தித்தன.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள் திட்டமிட்டபடி வாகனங்களை அறிமுகப்படுத்தின. ஊழியர்களின் நலன் கருதி ஆலைகளை தற்காலிகமாக இழுத்து மூடியதால், புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் சிக்கலைச் சந்தித்த நிறுவனங்கள் 2021ம் ஆண்டை ப் பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றன.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

ஆமாங்க, கடந்த ஆண்டு தள்ளிபோன புதுமுக வாகனங்களின் அறிமுகம் அனைத்தும் 2021-ல் அரங்கேற இருக்கின்றன. இதில், வருகின்ற ஜனவரி மாதம் அறிமுகமாக இருக்கும் கார்களின் பட்டியலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

எம்ஜி ஹெக்டர் பிளஸ் 7 சீட்டர்

எம்ஜி நிறுவனம் அதன் ஹெக்டர் பிளஸ் மாடலில் 7 சீட்டர் வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது வருகின்ற ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது, ஹெக்டர் பிளஸ் மாடலில் 6 இருக்கைகள் தேர்வு மட்டுமே விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனை விரிவாக்கம் செய்யும் விதமாக புதிய 7 சீட்டர் தேர்வு இந்தியாவில் களமிறக்கப்பட இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

நடுவில் இருக்கும் இருக்கைகள் கேப்டன் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எஞ்ஜின் தேர்வில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல், லேசான ஹைபிரிட் வசதியைக் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளே இதிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

டாடா அல்ட்ராஸ் டர்போ

டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் காரை 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த வரிசையில் புதிய எஞ்ஜின் தேர்வைச் சேர்க்கும் விதமாகவ டர்போ பெட்ரோல் எஞ்ஜின் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த தேர்வு கொண்ட அல்ட்ராஸ் காரின் அறிமுகம் வருகின்ற ஜனவரி மாதமே அரங்கேற இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

டாடா விற்பனைச் செய்து வரும் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த கார்களில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலும் ஒன்றாகும். இது ஐந்து நட்சத்திர பாதுகாப்பு வசதியைக் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வு கொண்ட அல்ட்ராஸ் ரூ. 7.99 லட்சத்தில் இருந்து ரூ. 8.75 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் புதிய நிற தேர்வாக இதில் மரினா நீலம் நிறம் வழங்கப்பட இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

டொயோட்டா ஃபார்ச்சூனர் (புதுப்பிக்கப்பட்ட மாடல்)

இன்னோவா புதுப்பிக்கப்பட்ட மாடலைத் தொடர்ந்து ஃபார்ச்சூனர் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடலையும் இந்தியாவில் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதமே இக்காரின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. முன்பை விட கூடுதல் கட்டுமஸ்தான தோற்றம் மற்றும் பரந்த இட வசதியுடன் இது உருவாகியுள்ளது. இத்துடன், கூடுதல் சொகுசு வசதிகளைப் பெற்ற மாடலாகவும் இது விற்பனைக்கு வரவிருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜென்டர்

டொயோட்டா நிறுவனம் அடுத்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் புதிய கார்களில் ஃபார்ச்சூனர் மாடலின் லெஜென்டர் மாடலும் ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு இந்த காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தது. இதனைத் தொடர்ந்தே அடுத்த மாதம் இக்கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

ஜனவரி 6ம் தேதி விற்பனைக்கான அறிமுகத்தை இக்கார் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் டொயோட்டா நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்பாகும். ஆகையால், இது புதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவிருக்கும் ஃபார்ச்சூனர் காருக்கே போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

அதிக பிரீமியம் வசதி, கூடுதல் தொழில்நுட்ப பன்முக நிறத்தேர்வு உள்ளிட்டவற்றை இக்காரில் டொயோட்டா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு நிலவும் என கூறப்படுகின்றது. இந்த எஸ்யூவி கார் கூடுதல் முரட்டுத்தனமான தோற்றத்தில் அறிமுகமாக இருப்பதால் ஆஃப்-ரோடு பயண பிரியர்களை நிச்சயம் இது கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

பிஎம்டபிள்யூ 6 செரீஸ் கிரான் லிமோசைன்

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, 2021ம் ஆண்டில் 3 செரீஸ் கிரான் லிமோசைன் காரையே இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இக்கார் கூடுதல் வீல் பேஸைக் கொண்ட மாடலாக நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. அதாவது வழக்கமான மாடலைக் காட்டிலும் 110 மிமீ கூடுதல் வீல் பேஸைக் கொண்டிருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

இந்த பிரத்யேக சொகுசு காரையே பிஎம்டபிள்யூ நிறுவனம் வருகின்ற ஜனவரி மாதம் 21ம் தேதி விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இது பிற 3 செரீஸ் மாடல் சொகுசு கார்களைக் காட்டிலும் கூடுதல் லக்சூரி அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், இதன் விலையும் சற்று கூடுதலாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

ஆடி ஏ4 (புதுப்பிக்கப்பட்ட மாடல்)

ஆடி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த லக்சூரி கார்களில் ஏ4 மாடலும் ஒன்று. இந்த காரின் புதுப்பிக்கட்ட மாடலையே ஆடி நிறுவனம் வருகின்ற ஜனவரி மாதம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதனை 2020 ஏப்ரல் 1ம் தேதியே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அது தகவல் வெளியிட்டு வந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி போகிய இதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு அரங்கேற இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

ஜீப் காம்பஸ்

ஜீப் நிறுவனம் அதன் காம்பஸ் எஸ்யூவி காரை கடந்த 2017ம் ஆண்டே இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்குக் களமிறக்கியது. அப்போதில் இருந்து தற்போது வரை எந்த மாற்றத்தையும் பெறாமல் அது விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே நான்கு வருடங்கள் கழித்து இந்த மாடலில் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை அது இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது.

அவசரப்படாதீங்க!! இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்க... அடுத்த மாசம் 7 புதிய கார்கள் அறிமுகமாக இருக்கு...

இந்த புதுப்பிக்கப்பட்ட மாடல் ரூ. 16.49 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இத்துடன், எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளுடன் அது விற்பனைக்கு வரவிருக்கின்றது.

Most Read Articles

English summary
List Of Confirmed Cars To Be Launched In January 2021. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X