Just In
- 46 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Movies
பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரையே மாற்றியமைத்த லூனாஸ்! முன்பை காட்டிலும் இப்போதான் செம்மைய இருக்கே!
அரிய வகை ரோல்ஸ் ராய்ஸ் காரையே மாடிஃபிகேஷன் நிறுவனம் ஒன்று மாற்றியமைத்துள்ளது. அதுகுறித்த தகவல் மற்றும் புகைப்படங்களை இந்த பதிவில் காணலாம்.

பொதுவாக வசதி குறைந்த காரையே மாடிஃபிகேஷன் செயல் மூலம் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட காராக வாகன பிரியர்கள் மாற்றியமைப்பர். எனவே, ரோல்ஸ் ராய்ஸ் காரை மாற்றியமைத்திருப்பது, அதன் பிரியர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர கார்களின் தலைவனாக பார்க்கப்படும் ஓர் காராக இருக்கின்றது.

எனவேதான் பலர் "ரோல்ஸ் ராய்ஸ் காரை மாற்றியமைத்திருக்கிறார்களா" என வாயை பிளக்கின்றனர். அதேசமயம், தற்போது செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தை பலர் வரவேற்றிருக்கின்றனர். இந்த மிக கவர்ச்சிகரமான மாற்றத்தை லூனாஸ் எனும் தனியார் நிறுவனம் செய்திருக்கின்றது. லூனாஸ் ஓர் சில்வர்ஸ்டோன் அடிப்படையிலான வாகனங்களை மாற்றியமைக்கும் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம், எரிபொருளால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட கார்களை மின் மோட்டார் திறனுக்கு மாற்றுவதில் பெயர்போன நிறுவனமாக இருந்து வருகின்றது. இம்மாதிரியான ஓர் செயலையே தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் அந்நிறுவனம் செய்திருக்கின்றது. இதற்காக அந்நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பழைய அரிய வகை காரை மட்டுமே தேர்வு செய்து இருக்கின்றது.

அந்தவகையில், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட 1961 ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் V காரின் புகைப்படமே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. லூனாஸ் நிறுவனம், இந்த காரை மட்டுமின்றி மேலும் பல அரிய வகை ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மின்சார வெர்ஷனுக்கு அப்டேட் செய்து தற்போது அறிமுகம் செய்திருப்பதாக டீம் பிஎச்பி தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த கார்கள் பன்முக மாடலில் விற்பனைக்குக் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு அல்லது நான்கு கதவு வசதி கொண்ட கார் மற்றும் லிமோசைன் அல்லது கூப் உள்ளிட்ட ரகத்தில் அவை கிடைக்கின்றன. இதுமட்டுமின்றி, ரோல்ஸ் ராய்ஸ் காரின் புகழுக்கு சற்றும் கலங்கம் இல்லாத வகையில் கூடுதல் சிறப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

அதாவது, நவீன யுகத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் அதில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இருக்கை வசதி அதிகப்படியானோரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இது முன்பு இருந்தததைக் காட்டிலும் மிகவும் மிருதுவமானா அட்டகாசமான ஸ்டைலிலும் காணப்படுகின்றது.

இதைத்தொடர்ந்தே, அக்காரில் எரிபொருள் எஞ்ஜின்கள் நீக்கப்பட்டு சிறப்பு திறன் கொண்ட மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த மின் மோட்டாருக்கான மின்சார சக்தியை வழங்க 120 kWh பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 483 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய சிறப்பு மாற்றத்திற்குள்ளான காரை லூனாஸ் நிறுவனம் ஜிபிபி மதிப்பில் 3,50,000 என்ற விலையில் விற்பனைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 34,327,654 கோடி ரூபாய் ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே மிகவும் கவர்ச்சியான ரோல்ஸ் ராய்ஸ் விண்டேஜ் கார்கள் விற்கப்படுகின்றன.

அண்மைக் காலங்களாக உலக நாடுகள் அனைத்திலும் மின்சார வாகனத்திற்கான தேவை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே, லூனாஸ் நிறுவனம் சிறப்பு தேர்வை வழங்கும் விதமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அரிய வகை கார்களை குறிக்கோளாக வைத்து மாற்றி வருகின்றது.

இது ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரியர்களை மட்டுமின்றி மின்வாகன பிரியர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உண்மையைக் கூற வேண்டுமானால் கார் வாங்க விரும்பாவதர்களைக்கூட அக்கார்களின் புதிய தோற்றம் நிச்சயம் வாங்கத்தூண்டுகின்ற அளவிற்கு மிகவும் அட்டகாசமானதாக உள்ளது.