அதிரடி முடிவு... பிரபல கார் நிறுவனம் பெட்ரோல், டீசல் கார் தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்!!

உலக புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை கை விட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று வெகு விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை கை விட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

அது வேறெந்த நிறுவனமும் இல்ல, பிரபல ஜெர்மான் நாட்டு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீதான் அது. இந்த நிறுவனமே விரைவில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம், பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் தயாரிப்புக்கு பதிலாக மின் வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

வரும் 2030ம் ஆண்டிற்குள்ளாக இந்த முயற்சியை நடைமுறைப்படுத்த இருப்பதாக அது கூறியுள்ளது. முன்னதாக, வரும் 2026ம் ஆண்டிற்குள் ஹைபிரிட் கார்களின் தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது. இதையடுத்தே முழுமையாக மின்சார வாகன தயாரிப்பை கையில் எடுக்க இருப்பதாக பென்ட்லீ தெரிவித்துள்ளது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

இதுகுறித்த தகவலை கடந்த வியாழக்கிழை (05 நவம்பர்) அன்று அது வெளியிட்டது. உலகின் மிகவும் பழமையான கார் நிறுவனமே பென்ட்லீ. இது 100 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். இந்த நிறுவனமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தையும் கையாண்டு வருகின்றது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

இது, விரைவில் தனது நூற்றாண்டு கொண்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றது. இதை முன்னிட்டு "பெயாண்ட் 100" (Beyond100) கொள்கையின் அடிப்படையில் இரு ஹைபிரிட் கார்களை அடுத்த வருடம் உலகளவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக அது கூறியுள்ளது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

உலகம் முழுவதிலும் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இவை, சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படுகின்ற காரணத்தினாலேயே உலக நாடுகள் அனைத்தும் மக்களிடம் மின் வாகன பயன்பாட்டை முன் மொழிந்து வருகின்றன. ஆனால், போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் விலையும் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் மின் வாகன பயன்பாட்டிற்கு மாறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

இந்த குறைகளைப் போக்கும் முயற்சியில் அரசுகள் மட்டுமின்றி சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆகையால், விரைவில் மின் வாகனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் போதியளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவிலும் மின் வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிரடி முடிவெடுத்த பிரபல கார் நிறுவனம்... விரைவில் பெட்ரோல், டீசல் வாகன தயாரிப்புக்கு குட்-பை சொல்ல போகுதாம்...

எனவே, மின் வாகனங்களுக்கான எதிர்காலம் மிக செம்மையாகக் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையிலேயே பென்ட்லீ நிறுவனம் தனது கோட்பாடு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. பென்ட்லீ நிறுவனத்தின் இந்த முடிவு சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சுத்தமான உலகை உருவாக்கும் நோக்கில் அது மேற்கொள்ள இருக்கும் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டுக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #பென்ட்லீ #bentley
English summary
Luxury Car Maker Bentley Planning To Launch Two Hybrids Car Over Next Year. Read In Tamil.
Story first published: Friday, November 6, 2020, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X