எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

இந்தியர்களின் ஆர்வத்தைக் கவர்ந்து வரும் புதுமுக மின்சார காரின் உட்புற வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் பிரவைக் டைனமிக்ஸ். இது ஓர் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இதுவே மிக விரைவில் உலக நாடுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் நவீன ரக மின்சார கார்களுக்கு இணையான வசதிகளுடன் ஓர் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

எக்ஸ்டிங்க்சன் எம்கே1 என பெயரிடப்பட்டிருக்கும் இக்காரையே பிரவைக் டைனமிக்ஸ் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்கார் பற்றிய முக்கிய தகவல்கள் இதுவரை வெளிவராமல் இருந்தநிலையில் தற்போது கார்குறித்த பல்வேறு முக்கிய தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

பிரவைக் நிறுவனம் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார காரை தற்போது இந்திய சாலையில் வைத்து சோதனையோட்டம் செய்து வருகின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் முன்மாதிரி மாடலையே நமஸ்தே கார் எனும் யுட்யூப் சேனல் ரிவியூ செய்து அதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

இதன்மூலமே இதுவரை காட்சியளிக்காத காரின் உட்புறங்கள்கூட தற்போது தரிசனம் வழங்கியிருக்கின்றன. மிக சமீபத்தில்தான் இக்கார் சோதனையோட்டத்தில் ஈடுபட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போதும் இணையத்தில் வைரலாகிய வண்ணம் இருக்கின்றது. இந்நிலையிலேயே எக்ஸ்டிங்க்சன் காரின் உட்புறம், வெளிப்புறம் என அனைத்தின் வீடியோவையும் யுட்யூப் சேனல் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

வெளிப்புறத் தோற்றம்:

யுட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில் பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார கார் வெளிப்புற கவர்ச்சியான தோற்றத்திற்காக பல்வேறு சிறப்பு வசதிகளைப் பெற இருப்பது உறுதியாகியுள்ளது. இக்கார் கூப்பர் ரக கார்களுக்கு இணையான ஸ்லங் உடல்வாகைப் பெற்றிருக்கின்றது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

இதற்கு மெருகேற்றும் வகையில் ஸ்லோப்பான ரூஃப், மெல்லிய இழைப் போன்ற முகப்பு பகுதி, புரஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப், ஸ்போக் அலாய் வீல் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் பார்வையாளர்களை ஒற்றை பார்வையிலேயேக் கவரும் வகையில் இருக்கின்றது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

உட்புறம்:

இது ஓர் சொகுசு வசதிக் கொண்ட மின்சார கார் என்பதால் அதிக இடவசதியை இக்காரில் நம்மால் காண முடிகின்றது. ஃபேஷன், டிசைன் மற்றும் சிறப்பு வசதிகள் உள்ளிட்டவற்றில் இக்கார் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ஓய்வறையைப் போன்று இதன் உட்புற பகுதி தென்படுகின்றது. இதற்கேற்ப வசதிக் கொண்ட இருக்கையே காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

சிறப்பம்சம்:

பிரவைக் எக்ஸ்டிங்க்சன் மின்சார காரில் 96 kWh திறன் பேட்டரி பேக்கே இடம்பெற இருக்கின்றது. இத்துடன் 201 எச்பி திறன் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்பட உள்ளது. இது அதிகபட்சமாக 0 த்தில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 5.4 செகண்டுகளிலேயே தொட்டுவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 196 கிமீ ஆகும். மேலும், இக்காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 504 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகின்றது.

எப்படியோ முழு தகவல் லீக் ஆயிடுச்சு... இந்த காரின் உட்புறம் இப்படிதான் இருக்கும்... வீடியோ!

Image Courtesy: Namaste Car

விற்பனை:

பிரவைக் நிறுவனம் இந்த மின்சார காரை வருடம் ஒன்றிற்கு 2,500 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால், இக்காரை தனி நபரால் உரிமையாக்கிக் கொள்ள முடியாது என்பது வேதனையளிக்கக்கூடிய தகவல் ஆகும்.

ஆமாங்க இக்காரை வாடகை மற்றும் பிரத்யேக பொது சேவையில் (chauffeur) மட்டுமே ஈடுபடுத்த அது திட்டமிட்டுள்ளது. மேலும், இக்காரை முதலில் தலைநகர் டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Made-In-India Electric Car Pravaig Extinction MK1 First Look Walkaround Video. Read In Tamil.
Story first published: Saturday, December 26, 2020, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X