மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் விலை விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

கடந்த 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதற்கு தக்கவாறு வாகன நிறுவனங்கள் பிஎஸ்6 மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, அறிமுக தேதியை வாகன நிறுவனங்கள் ஒத்தி போட்டு வருகின்றன.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

லாக் டவுன் தொடர்வதால், வேறு வழியின்றி ஆன்லைன் மூலமாக அறிமுக அறிவிப்புகளை வாகன நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், மஹிந்திரா நிறுவனம் ஆன்லைனில் விற்பனை நடமுறைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

அதன்படி, மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் விலை மற்றும் விபரங்கள் அந்நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.28.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், 4 வீல் டிரைவ் மாடலுக்கு ரூ.31.69 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்4 மாடலானது முறையே ரூ.27.70 லட்சம் மற்றும் ரூ.30.70 லட்சத்தில் விற்கப்பட்ட நிலையில், பிஎஸ்6 மாடலின் விலை ரூ.99,000 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 எச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தக்கவைக்கப்படுகிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

இதில் விசேஷமான விஷயம் என்னவெனில், பிஎஸ்4 மாடலைவிட பிஎஸ்6 மாடலின் மைலேஜ் சற்று அதிகரித்துள்ளது. அதாவது, பிஎஸ்4 மாடல் லிட்டருக்கு 11.5 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், பிஎஸ்6 மாடல் லிட்டருக்கு 12.03 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

அல்டுராஸ் எஸ்யூவியின் 2 வீல் டிரைவ் மாடலில் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, வென்டிலேட்டட் இருக்கைகள், ரியர் வியூ கேமரா, 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

அல்டுராஸ் 4 வீல் டிரைவ் மாடலில் கூடுதலாக ஓட்டுனர் இருக்கைக்கு மெமரி வசதி, 360 டிகிரி கேமரா, சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பேஸ் மாடலில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 4 வீல் டிரைவ் மாடலில் 9 ஏர்பேக்குகள் உள்ளன.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் அறிமுகம்... விலை கணிசமாக அதிகரிப்பு!

மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவிக்கு ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மஹிந்திரா இணையதளத்தின் மூலமாக புக்கிங் செய்வோருக்கு லாக் டவுன் முடிந்த உடன் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

இந்தியாவின் பிரிமீயம் ரக எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி சிறந்த தேர்வாக இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கி உள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has launched Alturas G4 with BS6 compliant diesel engine in India prices starting at Rs.28.69 lakh (Ex-showroom).
Story first published: Monday, April 27, 2020, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X