சாங்யாங் நிறுவனத்தை மொத்தமாக கழற்றிவிட மஹிந்திரா முடிவு... அல்டுராஸ் விற்பனையையும் நிறுத்துகிறது

அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்துவதற்கு மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

இந்தியாவின் முழுமையான பரிமாணம் கொண்ட எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியும் முக்கியத் தேர்வாக இருந்து வருகிறது. மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வரும் தென்கொரிய கார் நிறுவனமான சாங்யாங் மோட்டார்ஸின் ரெக்ஸடன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக விற்பனையில் உள்ளது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், எம்ஜி க்ளோஸ்ட்டர் மாடல்களுக்கு இணையான ரகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மஹிந்திராவின் விலை உயர்ந்த கார் மாடலாகவும் இருந்து வருகிறது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

இந்த நிலையில், அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் விற்பனையை நிறுத்துவதற்கு மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனை நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

அதாவது, சாங்யாங் நிறுவனத்தில் உள்ள தனது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்ய மஹிந்திரா முடிவு செய்துவிட்டது. இதனால், இந்த எஸ்யூவியை தொடர்ந்து விற்பனை செய்யும் திட்டம் மஹிந்திராவிடம் இல்லை.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

அதேநேரத்தில், அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியை 500 யூனிட்டுகள் உற்பத்தி செய்வதற்கான உதிரிபாகங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதன் பிறகு விற்பனையில் இருந்து விலக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

தென்கொரியாவில் இருந்து உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு மஹாராஷ்டிர மாநிலம் புனே அருகில் சகன் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா ஆலையில் இந்த எஸ்யூவி அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

கடந்த ஏப்ரல் மாதம் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அராய் சான்றுபடி லிட்டருக்கு 12.03 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, வென்டிலேட்டட் வசதியுடன் முன் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர், ரியர் வியூ கேமரா, பார்க்கிங் சென்சார்கள், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உள்ளன.

 அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனையை நிறுத்த மஹிந்திரா முடிவு?

இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் 9 ஏர்பேக்குகள், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மஹிந்திா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி ரூ.28.72 லட்சம் முதல் ரூ.31.72 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to a media report, Mahindra is planning to discontinue the Alturas G4 by sometime next year.
Story first published: Wednesday, December 9, 2020, 9:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X