என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

காலத்தால் மழுங்கடிக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் பிரபல கார்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மிகவும் பழமையான வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இது, இந்திய வாகன சந்தையில் ஏராளமான வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றது. குறிப்பாக, ஆன்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு ஆகியவற்றில் பயன்படக்கூடிய வகையிலான வாகனங்களை வித விதமான தேர்வுகளில் தற்போது வரை வழங்கி வருகின்றது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

அந்தவகையில்,அறிமுகம் செய்யப்பட்ட பல மாடல்களில் ஒருசில மட்டும் இப்போதும் புத்துயிர் பெற்று விற்பனையில் இருக்கின்றன. ஆனால், ஒரு சில மாடல்கள் மட்டும் வரவேற்பைப் பெறாமல் காலத்தால் அழிந்திருக்கின்றன. இருப்பினும், அந்த வாகனங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தக் கூடியவையாக இருக்கின்றன. மேலும், அவை எப்படி காலத்தால் மறைந்து மழுங்கடிக்கப்பட்டன என்ற கேள்வியும் நம் மத்தியில் எழும்பிய வண்ணமே இருக்கின்றது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

அந்தவகையில் மஹிந்திரா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் தற்போது காலத்தின் சூழ்ச்சியால் மழுங்கடிக்கப்பட்ட குறிப்பிட்ட சில வாகனங்களைப் பற்றிய தகவலைதான் இந்த நாம் பார்க்கவிருக்கின்றோம்.

இதில், ஒரு சில வாகனங்களைப் பார்க்கும்போது என்ன மஹிந்திரா இம்மாதிரயான வாகனங்களையெல்லாம் தயாரித்து இருக்கின்றதா என்ற நம்மிடையே எழும்பாமல் இல்லை. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா லெஜண்ட் (Mahindra Legend)

மஹிந்திரா லெஜண்ட் இது தார் என்ற ஜீப்பின் மூதாதையராக காட்சியளிக்கின்றது. இந்த லெஜண்ட் ஜீப் ரக வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் எம்எம்ம 540/550 என்ற பிளாட்பாரத்தில் உற்பத்தி செய்தது குறிப்பிடத்தகுந்தது. இது இரு கதவு கொண்ட எஸ்யூவி ஸ்டைலிலான வாகனம் ஆகும்.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

இந்த வாகனத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பே கிடைத்தது. ஆனால், பெருவாரியான முகவர்களைக் கவர தவறிவிட்டது.

இதன் காரணமாகவே, காலத்தின் சூழ்நிலையால் இந்த கார் விற்பனையில் இருந்து விளக்குக் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது. இந்த வாகனத்தில் 2.5 லிட்டர் டீசலை எஞ்ஜினைக் கொண்டிருக்கின்றது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா கிராண்ட் அர்மதா (Mahindra Grand Armada)

மஹிந்திரா கிராண்ட் அர்மதா இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற மஹிந்திரா வாகனங்களில் ஒன்றாக இருக்கின்றது. ஆனால், இது இந்தியாவை விட்டு வெளியேறியது தற்போதும் அதன் ரசிகர்கள் மற்றும் மஹிந்திரா நிறுவனத்திற்கே அதிர்ச்சியான ஒன்றாக இருக்கின்றது.

ஏனென்றால், அந்தளவிற்கு சிறப்பான தோற்றத்தைக் கொண்ட வாகனமாக கிராண்ட் அர்மதா இருந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

குறிப்பாக அதன் கிளாசியல் க்ரில் மற்றும் வித்தியாசமான வடிவம் கொண்ட வட்ட ஹெட்லேம்ப் உள்ளிட்டவை கண்கவர் அம்சங்களாக இருந்தது. இதுமட்டுமின்றி, இதன் கேபினும் அதிக சொகுசு அம்சங்களைக் கொண்டதாக இருந்தது.

இருப்பினும், சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் புரட்சிகளின் காரணத்தால் இந்த திடீர் வீழ்ச்சியை சந்தித்து வெளியேற்றப்பட்டது. இதனை 4X4 வேரியண்டா மஹிந்திரா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா வோயகர் (Mahindra Voyager)

மஹிந்திரா வோயகர் வாகனமும் இந்தியால் உச்சபட்ச வரவேற்பைப் பெற்ற மஹிந்திராவின் தயாரிப்புகளில் ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக 90-களில் புரட்சி செய்த வாகனத்தில் இந்த வோயகர் மாடலும் ஒன்று. இது எம்யூவி ரக மாடல் ஆகும்.

இந்த காரை மிட்சுபிஷி நிறுவனத்தின் எல்எஸ்300 மாடலை ரீபோட்ஜ் செய்து மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

ஆகையால், அதிக விலையைக் கொண்ட மாடலாக காட்சியளித்தது. எனவே, குறிப்பிட்ட காலங்களுக்கு பின்னர் இந்த காருக்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. இதனாலயே வந்த வேகத்தில் இந்த கார் சந்தையில் இருந்து பின் வாங்கப்பட்டது. இந்த காரில் பீஜோவின் 2.5 லிட்டர் டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா கமேண்டர் (Mahindra Commander)

மஹிந்திரா நிறுவனம் இந்த கமேண்டர் ரக வாகனத்தை இந்தியாவில் முதல் முறையாக 1991-ல் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தொடர்ந்து, பல தேர்வுகளில் (வேரியண்டில்) இந்த காரை வழங்கி ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, சாஃப்ட் டாப் மற்றும் பல இருக்கைகள் தேர்வுகளில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த வாகனத்தை எல்டபிள்யூ வேரியண்டாவும் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மஹிந்திரா கமேண்டர் காருக்கான வரவேற்பு நாளுக்கு நாள் உயர்ந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

ஆனால், சந்தையில் தோன்ற புதுமுகங்களில் இதனை சற்றே மழுங்கடிக்கச் செய்தது. இதன் விளைவாக தற்போது இந்த கார் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் ஆகிவிட்டது. இருப்பினும், ஒரு சிலர் இந்த காரை தற்போது பாதுகாத்து வருகின்றனர்.

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் 650டிஐ மற்றும் 750டிபி மற்றும், 2டபிள்யூ மற்றும் 4டபிள்யூ ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா பொலிரோ இன்வேடர் (Mahindra Bolero Invader)

மஹிந்திரா பொலிரோ இன்வேடர் எம்யூவி ரக வாகனம் ஆகும். இதில், ஸ்பேஸ் மற்றும் சொகுசு வசதிகள் இருந்த காரணத்தால் அதிக வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இதன் மூன்று டூர்கள் கொண்ட தோற்றம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவித்தது.

இதன் பின்பக்க இருக்கைகள் பக்கவாட்டு பகுதியை பார்த்தவாறும், மேற்கூரை திறந்தநிலையில் இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

குறிப்பாக இந்திய இளைஞர்களைக் கவர்கின்ற நோக்கிலேயே இந்த கார் களமிறக்கப்பட்டது. இதற்கேற்ப எஞ்ஜின் திறனை வழங்கவும் மஹிந்திரா தவரவில்லை. இதில், 2.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது, அதிகபட்சமாக 63 பிஎச்பி மற்றும் 117 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

காலப்போக்கில் இந்த காருக்கான வரவேற்பும் குறைந்ததை அடுத்து மஹிந்திரா நிறுவனம், சந்தையில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திார ஆக்ஸே (Mahindra AXE)

மஹிந்திரா நிறுவனம் பயணிகள்பயன்பாட்டிற்காக மட்டுமின்றி நாட்டின் ராணுவத்திற்கு பயன்படக்கூடிய வகையிலான வாகனங்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்களில் ஒன்றுதான் மஹிந்திரா ஆக்ஸோ. இந்த கார் இந்திய இராணுவத்தில் மட்டுமின்றி உலகின் பல்வேறு இராணுவப்படையிலும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் 2.7 லிட்டர் டீசல் எஞ்ஜினைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 173 பிஎச்பி மற்றும் 346 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இத்துடன், 4.0 லிட்டர் எஞ்ஜின் தேர்விலும் இந்த கார் அறிமுகம் விற்பனைக்கு வழங்கப்பட்டது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா ஏடிவி (Mahindra ATV)

மஹிந்திரா நிறுவனம் கடற்படையினருக்கு உதவுகின்ற வகையிலான வாகனத்தையும் உற்பத்தி செய்தது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையிலான கார் வாகனம்தான் இந்த ஏடிவி ஆஃப் ரோடர் ரக வாகனம். இதனை மணல் மட்டுமின்றி பனிப் பிரதேசங்களிலும் இயக்க முடியும். மேலும், இதனை கரடு முரடான காடுகள் போன்ற சாலைகளில் இயக்குவதும் மிக சுலபம்.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா ஃபார்முலா இ (Mahindra Formula E)

மஹிந்திரா ஃபார்முலா இ, இதல் இ என்பது எலெக்ட்ரிக் என்பதை குறிக்கும். ஆகையால், மஹிந்திரா அப்போதைய காலக்கட்டத்திலேயே மின்சார வாகனங்களை தயாரித்திருப்பது உறுதியாகியிருக்கின்றது. இந்த காரை பந்தயங்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மஹந்திரா தயாரித்தது. இந்த காரின் மூலம் எஃப்ஐஎம் பட்டத்தை மஹிந்திரா வென்றது.

ஆகையால், உலக புகழ்வாய்ந்த கார்களில் பந்தய கார்களில் ஒன்றாக இந்த ஃபார்முலா இ இருக்கின்றது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

ஜென்ஸே (GenZe)

மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டு நிறுவனங்களில் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஜென்ஸே. அது அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும்.

இந்த இரு சக்கர வாகனம் மின்சார ரக வாகனம் ஆகும். இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்ட இருசக்கர வாகனம். அமெரிக்கா நகர வாசிகள் நல்ல வரவேற்பைப் பெற்ற மின்சார இருசக்கர வாகனத்தில் இதுவும் ஒன்று.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

ஆனால், காலத்தின் கட்டாயத்தால் இந்த இரு சக்கர வாகனம் தற்போது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும், இதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட பீஜோ என்ற மின்சார இரருசக்கர வாகனத்தை மஹிந்திரா புதிய தொழில்நுட்ப உதவியுடன் தயாரித்து வருகின்றது. ஜென்ஸே மின்சார இருசக்கர வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்களே போதுமானது.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா போட்ஸ் (Mahindra Boats)

மஹிந்திரா நிறுவனம் தரையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களைப் போலவே நீரில் செல்லும் லக்சூரி வசதிக் கொண்ட படகுகளையும் தயாரித்து வருகின்றது. இது பலர் அறியாத ஓர் தகவலாக இருக்கலாம். ஆனால், உண்மையில் மஹிந்திரா இதுபோன்ற படகுகளைத் தயாரிப்பது உண்மை ஆச்சரியம் கலந்த உண்மை.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மேலும், இதுவே இந்தியாவிந் முதல் படகு தயாரிப்பளும்கூட. தற்போது வரை லக்சூரி படகு தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கான படகுகளை உலக நாடுகள் பலவற்றிற்கு இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.

இந்தியாவிலும், இந்நிறுவனத்தின் படுகுகள் கணிசமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

என்னது மஹிந்திரா படகு தயாரித்ததா..? காலத்தால் மறைந்த மஹிந்திராவின் ஆச்சரியமளிக்கும் வாகனங்கள்!

மஹிந்திரா நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த கார்கள் சந்தையில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு புதுமுகங்கள் வருகை மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டிற்கு இந்திய வாகனத்துறையில் அப்போதைய மத்திய அரசு திறந்தநிலையை அறிமுகம் செய்ததும் ஓர் காரணமாக இருக்கின்றது.

இதனால், மஹிந்திரா நிறுவனம் மட்டுமின்றி டாடா நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்புகளும் சந்தையை விட்டு வெளியேற்றம் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra's Forgotten Vehicles. Read In Tamil.
Story first published: Monday, March 16, 2020, 13:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X