ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அதன் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் வாகனமான ஆட்டம்-ன் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதனையும் இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பற்றியும் இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

மஹிந்திராவின் ஆட்டம் எலக்ட்ரிக் மாடலின் அறிமுகம் இந்தியாவில் அடுத்த வருடத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில், 4 இருக்கை அமைப்புடன் நகர்புற போக்குவரத்திற்கு பசுமையான கடைசி-மைல் வாகனமாக இது விளங்கும் என்றும் எதிர்கால இந்திய போக்குவரத்திற்கான வாகனம் இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

முன்னதாக கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் இந்த எலக்ட்ரிக் மாடல் காட்சிப்படுத்தப்படு இருந்தது. இதனால் இதன் அறிமுகம் இந்த வருடத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் இதன் வருகையில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

ஆட்டம் எலக்ட்ரிக் வாகனத்தில் 15 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார், லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக முழு சார்ஜில் சுமார் 75 கிமீ தூரம் வரையில் இயங்கலாம் என கூறப்படும் இந்த குவாட்ரிசைக்கிளின் அதிகப்பட்ச வேகம் 60kmph என்ற அளவில் இருக்கும்.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

பேட்டரியை நகர்த்தும் வசதியை இந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கு மஹிந்திரா நிறுவனம் கொடுக்கப்படாவிட்டாலும், இதனை சார்ஜிங் நேரத்தை 4 மணிநேரத்திற்குள்ளாகவே நிர்ணயிக்கும் என கூறப்படுகிறது. இந்த வகையில் சார்ஜ் செய்ய 12 வோல்ட்ஸ் பவர் வழங்கி தேவைப்படும்.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் ஆட்டம் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிள் (நான்கு சக்கர வாகனம்) நிமிர்ந்த தோற்றத்தையும், சுற்றிலும் நீளமான கண்ணாடிகளை பெறவுள்ளது. வெளிப்புறத்தில் தெளிவான லென்ஸ் உடன் ஹெட்லேம்ப்கள், பிரதிபலிக்கும் ஸ்ட்ரிப்களுடன் முன் மற்றும் பின்புறத்தில் பம்பரை பெறவுள்ள இந்த காரின் உட்புறத்தில் ஓட்டுனருக்கு பின் இருக்கை வரிசையில் மூன்று நபர்கள் கூட அமரலாம்.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

இதன் மூலம் இதன் உட்புறத்தில் மஜிந்திரா நிறுவனம் வழங்கவுள்ள விசாலமான பகுதிகளை நீங்கள் அறியலாம். அதேநேரம் பொருட்களை ஏற்றி செல்வதும் இந்த எலக்ட்ரிக் மாடலில் எளிதான ஒன்றாகவே இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் காற்றுப்பைகள் அல்லது ஏபிஎஸ் போன்ற தொழிற்நுட்பங்களை நிச்சயம் இந்த வாகனத்தில் எதிர்பார்க்க முடியாது.

ஸ்மார்ட் இந்தியாவின் எதிர்கால போக்குவரத்திற்கான வாகனம் மஹிந்திரா ஆட்டம் எலக்ட்ரிக் தானாம்..!

மலிவான நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த மாடலுடன் தற்போதைய கேயூவி100 மாடலின் எலக்ட்ரிக் வெர்சனை தயாரிக்கும் பணியிலும் மஹிந்திரா ப்ராண்ட் விரைவில் இறங்கவுள்ளது. ஆட்டம் எலக்ட்ரிக் குவாட்ரிசைக்கிளின் விலை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra teases Atom electric vehicle, launch likely next year
Story first published: Tuesday, July 7, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X