சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் வித்தியாசமான தோற்றமுடைய அடாம் மின்சார குவாட்ரி சைக்கிள் இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் காட்சிப்படுத்தப்பட்டது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

மின்சார வாகன உலகில் புரட்சியை செய்யும் விதமாக மஹிந்திரா நிறுவனம் குவாட்ரி சைக்கிள் ரகத்திலான எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளது.

அண்மைக் காலங்களாக இந்த வாகனத்தை சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வந்த இந்நிறுவனம், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாகன கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

முன்னதாக இந்த குவாட்ரி சைக்கிளை அந்நிறுவனம் மறைக்கப்பட்ட தோணியிலேயே டெஸ்ட்டிங்கில் ஈடுபடுத்தி வந்தது. ஆகையால், இந்த வாகனத்தின் தோற்றம் அறியாத நிலையே நிலவியது. இதைத்தொடர்ந்து, அனைத்து தரப்பு மக்களிடையே ஆவலை ஏற்படுத்தி வந்த இந்த வாகனம் இன்று முதல்முறையாக ஆட்டோ எக்ஸ்போவில் முழு தரிசனத்தையும் வழங்கியுள்ளது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

முன்பு மறைக்கப்பட்ட நிலையில் இருந்தபோது எப்படி பார்வையாளர்களை கவர்ந்து இழுத்ததோ, அதேபோன்று காட்சிப்படுத்திய பின்னரும் அநேகரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த குவாட்ரி சைக்கிள் மின்சார காரின் தோற்றம் இருக்கின்றது.

இந்த அடாம் மின்சார வாகனம் மூன்று சக்கர ஆட்டோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால், இது ஓர் நான்கு சக்கரங்கள் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவாகும்.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

ஆட்டோ ரிக்ஷாக்களில் காண்பதைப் போல அடாம் மின்சார வாகனத்தின் எஞ்ஜினும் பின் பகுதியில் பொருத்தப்பட்டிருப்பதே இவ்வாறு கூறுவதற்கு காரணமாக இருக்கின்றது.

முன்னதாக மஹிந்திரா நிறுவனம் இ2ஓ மற்றும் இ2ஓ ப்ளஸ் ஆகிய மின்சார கார்களை விற்பனைச் செய்து வந்தது. இது புதிய பாதுகாப்பு விதியை தேர்ச்சி பெறாத என்ற காரணத்தால் அவற்றை விற்பனையில் விளக்கிக் கொள்ளப்பட்டது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

ஆனால், இவ்விரு கார்களையும் காட்டிலும் குறைந்தளவில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற இந்த குவாட்ரி சைக்கிள் அடாம் மின்சார வாகனம் இருக்கின்றது. அதற்கேற்ப உடல் கட்டுமானம் மற்றும் காரின் உள்பக்க கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

இந்த கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் பஜாஜ் க்யூட் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு போட்டியாக இருக்கும். இந்த க்யூட் மின்சார வாகனமும் குவாட்ரி சைக்கிள் ரகத்திலானதுதான்.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

மஹிந்திரா அடாம் குவாட்ரி சைக்கிள் ஆட்டோக்களுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டிருப்பதால் இதில் இரு கதவுகள் மட்டுமே காணப்படுகின்றன. இதேபோன்று, மூன்று இருக்கை அமைப்பைக் கொண்டிருப்பதாக தோன்றுகின்றது. இருப்பினும், ஆட்டோக்களில் காணப்படாத ஒரு சில சௌகரியமான அம்சங்கள் இதில் உள்ளன.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

குறிப்பாக, ஏர் கன்டிஷனர், டிவி திரை, செல்போன் சார்ஜிங் போர்ட் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றது.

இத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கே உரித்தான சில ஸ்மார்ட் கன்னெக்டிவிட்டி அம்சம் போன்றவையும் இந்த குவாட்ரி சைக்கிளில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

இந்த வாகனத்தின் உயரம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாக இருப்பதால் அசௌகரியமான உணர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என தெரிகின்றது. தொடர்ந்து, ஆட்டோவைக் காட்டிலும் மிகவும் சொகுசான பயண அனுபவத்தை வழங்குகின்ற வகையில் வசதி வாய்ப்பை இது ஏற்படுத்தி தரும் எனவும் நம்பப்படுகின்றது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

ஆனால், இந்த வாகனத்தின் விலை மற்றும் பேட்டரி ரேஞ்ச் போன்ற முக்கியமான தகவல்களை மஹிந்திர வெளியிடவில்லை. இதனை மிக விரைவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...

சென்னை நகரத்தின் எல்லைப்புற சாலைகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட தோணியில் காட்சியளித்து வந்த இந்த அடாம், இனி வரும் காலங்களில் முழுமையான காட்சிகளுடனே வலம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய சாலைகளை கலக்கும் வகையில் விற்பனைக்கும் விரைவில் வரும் கூறப்படுகின்றது.

Most Read Articles
 
English summary
Mahindra Atom Unveiled At Auto Expo 2020. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X