இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் கார் விற்பனை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன. கேயூவி100 என்எக்ஸ்டி (KUV100 NXT) காரில் இருந்து தொடங்குவோம். கடந்த ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் வெறும் 48 கேயூவி100 என்எக்ஸ்டி கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 169 ஆக இருந்தது. கேயூவி100 என்எக்ஸ்டி விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும், எக்ஸ்யூவி300 (XUV300) விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் 2,532 எக்ஸ்யூவி300 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

ஆனால் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 2,990 ஆக உயர்ந்துள்ளது. இது 18.08 சதவீத வளர்ச்சியாகும். எனினும் வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காருக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. மிகவும் போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

இந்த செக்மெண்ட்டில் கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் என இரண்டு புதிய கார்கள் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இதுதவிர ரெனால்ட் கிகர், நிஸான் மேக்னைட் ஆகிய கார்களும் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. எனவே வரும் மாதங்களில் போட்டி அதிகரிப்பது உறுதி.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

இதற்கிடையே மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரை போலவே, மஹிந்திரா ஸ்கார்பியோ (Scorpio) எஸ்யூவியும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் 3,327 ஸ்கார்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 2,862 ஆக மட்டுமே இருந்தது. இது 16.25 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

ஆனால் டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவிக்கள் அளிக்கும் கடும் போட்டியால், மஹிந்திரா எக்ஸ்யூவி500 (XUV500) காரின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் 919 எக்ஸ்யூவி500 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 968 ஆக இருந்தது. இது 5.06 சதவீத வீழ்ச்சி ஆகும். அதே சமயம் கடந்த ஆகஸ்ட் மாதம் மஹிந்திரா நிறுவனம் ஒரே ஒரு அல்டுராஸ் ஜி4 (Alturas G4) எஸ்யூவி காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதிக விலை உள்ளிட்ட காரணங்களால், அல்டுராஸ் ஜி4 காரின் விற்பனை சற்று குறைவாகதான் இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

என்றாலும் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 71 யூனிட்கள் என்ற ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையைதான் அல்டுராஸ் ஜி4 பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ (Bolero) விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பொலிரோதான் கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான மஹிந்திரா நிறுவனத்தின் கார்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

கடந்த ஆகஸ்ட் மாதம் 5,487 பொலிரோ கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,993 பொலிரோ கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இது 37.41 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் மஹிந்திரா மராஸ்ஸோ (Marazzo) காரின் விற்பனை அசைவின்றி அப்படியே ஒரே இடத்தில் இருப்பதை போல் உள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

ஆகஸ்ட் 2020 மற்றும் ஆகஸ்ட் 2019ல் முறையே 635 மற்றும் 637 யூனிட்கள் என்ற விற்பனை எண்ணிக்கையை மஹிந்திரா மராஸ்ஸோ பதிவு செய்துள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனையும் ஓரளவிற்குதான் உள்ளது. ஊரடங்கு ஏற்படுத்திய சரிவில் இருந்து ஆட்டோமொபைல் துறை தற்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார் எதுன்னு தெரியுமா? சரியா சொல்லுங்க பார்க்கலாம்...

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதில் சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பானதாக கருதுவதாலும், வரும் நாட்களில் கார்களின் விற்பனை நன்றாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra August 2020 Sales Report. Read in Tamil
Story first published: Thursday, September 17, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X