20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

20-இன்ச் மெர்சிடிஸ் நிறுவனத்தின் அலாய் சக்கரங்களுடன் மஹிந்திரா பொலிரோ மாடல் மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் கார் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

கடந்த 2000ல் இருந்து தற்போதுவரை விற்பனையில் உள்ள பொலிரோ மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் சிறந்த எஸ்யூவி கார்களுள் ஒன்றாக இந்திய சந்தையில் விளங்கி வருகிறது. அதிக செயல்திறன் மற்றும் அதிகளவிலான பயணிகளை ஏற்கும் திறன் உள்ளிட்டவைகளால் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் இந்த மாடல் பிஎஸ்6 தரத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

எக்ஸ்ஷோரூமில் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரையிலான விலையினை பெற்றுள்ள பொலிரோ எஸ்யூவி கார் பிஎஸ்6 மாற்றத்தினால் முன்புறத்தில் சிறிய அப்டேட்களுடன் பாதசாரி க்ராஷ் சோதனையின் மூலமாக சில கட்டாய மாற்றங்களையும் ஏற்றுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் பரவாது... மும்பையை கலக்கும் ஆட்டோக்களில் அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி... என்னனு தெரியுமா?

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

இதனால் பொலிரோ மாடலின் வெளிப்புறம் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அலாய் சக்கரங்களை இந்த கார் கூடுதல் தேர்வாக கூட பெறவில்லை. இதுவே இதன் சில வாடிக்கையாளர்களை அலாய் சக்கரங்களுக்காக கஸ்டமைஸ்ட் பணிகளுக்கு உட்படுத்த காரணமாக அமைந்துள்ளது.

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

இந்த வகையில் பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்த வெலோசிட்டி டயர்கள் என்ற நிறுவனத்தின் மூலமாக 2020 மஹிந்திரா பொலிரோ மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 20-இன்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது. இந்த மல்டி-ஸ்போக் சக்கரங்களை மெர்சிடிஸ்-பென்ஸின் ஏஎம்ஜி வரிசை கார்களில் பார்த்திருக்க முடியும்.

MOST READ: பென்ஸ் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் ஆபீஸ் போன தொழிலதிபர்! எல்லாரும் ஆடிப்போய்டாங்க

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

இதுமட்டுமின்றி மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகனின் உயரமான பில்லர்களும் இந்த எஸ்யூவி காருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தோற்றத்திற்கு அலாய் சக்கரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. அலாய் சக்கரங்களுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள டயர்கள் தைவான் நாட்டை சேர்ந்த சோனார் பெர்ஃபார்மன்ஸ் என்ற நிறுவனத்தின் உடையது.

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

பொலிரோ மாடலில் பின்புறத்தை காட்டிலும் முன்புறம் சற்று அகலமாக இருக்கும். இதனை கஸ்டமைஸ்ட் நிறுவனம் சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளது. அதேநேரம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் லோகோவுடன் உடன் அலாய் சக்கரங்கள் பொலிரோ மாடலின் தனித்துவமான தோற்றத்தையும் எந்த விதத்திலும் சிதைக்கவில்லை.

MOST READ: கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

இந்த கஸ்டமைஸ்ட் காரில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கமான 1.5 லிட்டர் 3-சிலிண்டர் எம்ஹாவ்க்75 டீசல் என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் தொடர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக 75 பிஎச்பி மற்றும் 195 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் பொலிரோ எஸ்யூவி மாடல் 16.7 kmpl மைலேஜ்ஜை வழங்குகிறது.

20-இன்ச் மெர்சிடிஸ் அலாய் சக்கரங்களுடன் 2020 மஹிந்திரா பொலிரோ... சூப்பராக மாற்றியுள்ள உரிமையாளர்..

இந்த டீசல் என்ஜின் உடன் இணைக்கப்பட்டுள்ள 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் பின்புற சக்கரங்களுக்கு வழங்கும். இவற்றுடன் பொலிரோ காரானது முன்புறத்தில் சுதந்திரமான சஸ்பென்ஷனையும், பின்புறத்தில் லிவ் ரிஜிட் ஆக்ஸலையும் கொண்டுள்ளது.

Most Read Articles

English summary
2020 Mahindra Bolero Fitted With 20-Inch Wheels Brings G-Wagon Vibes
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X