மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

மஹிந்திரா கார்களை வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் மாற்றி அழகுப்படுத்துவதற்கான பிரத்யேக இணையதளத்தை மஹிந்திரா நிறுவனம் துவங்கி இருக்கிறது.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

எஸ்யூவி கார்களுக்கான மவுசு இந்தியாவில் ரொம்பவே அதிகமாக இருந்து வருகிறது. மேலும், எஸ்யூவி கார்களின் தோற்றத்தை தனித்துவமாக மாற்றிக் கொள்வதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.பொதுவாக கார்களை கஸ்டமைஸ் செய்வதற்கு, அதற்காக செயல்படும் அங்கீகரிக்கப்படாத கார் அழகுப்படுத்தும் நிலையங்களில் செய்ய வேண்டி இருக்கிறது. இதில், சில ஆக்சஸெரீகள் மற்றும் மாற்றங்கள் செய்தால், வாரண்டி பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

இதனை மனதில் வைத்து, எஸ்யூவி தயாரிப்பில் ஸ்பெஷலிஸ்ட்டாக உள்ள மஹிந்திரா நிறுவனம் தனது கார்களை அழகுப்படுத்துவதற்கான பிரத்யேக வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்தது.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

இதற்காக தற்போது பிரத்யேக இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளது. மஹிந்திரா கஸ்டமைசேஷன் என்ற பெயரில் இந்த புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா தார், ஸ்கார்ப்பியோ, பொலிரோ எஸ்யூவிகளுக்கு மட்டுமே இப்போது அழகுப்படுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்வென்ச்சர் பயன்பாடுகளுக்கு ஏற்ற ஓபன் டாப், சாஃப்ட் டாப் மற்றும் ஹார்டு டாப் ஆகிய வகையிலான கூரை கட்டமைப்பு தார் எஸ்யூவிக்கு வழங்கப்படுகிறது.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

மேலும், ஸ்கார்ப்பியோ, பொலிரோ ஆகிய எஸ்யூவிகளுக்கு பல்வேறு விதமான அழகுப்படுத்துவதற்கான ஆக்சஸெரீகள், அழகூட்டும் ஸ்டிக்கர் அலங்காரம் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. ஸ்கார்ப்பியோவுக்கு டார்க்ஹார்ஸ், லைஃப்ஸ்டைல், மவுன்டெயினீர், எக்ஸ்ட்ரீம் ஆகிய பெயர்களில் இந்த பேக்கேஜ் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ஆட்டிடியூட், ஸ்டிங்கர், எக்ஸ்க்ளூசிவ், லிமிடேட் எடிசன் ஆகிய நான்கு விதமான கஸ்மடைஸ் பேக்கேஜுகள் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

கஸ்டமைஸ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள இதற்கான பிரத்யேக மையத்தில் தங்களது மஹிந்திரா எஸ்யூவியை விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். வாகனத்தை மும்பை கொண்டு வந்து கஸ்டமைஸ் செய்வதற்கான உதவிகளை மஹிந்திரா கஸ்டமைஸ் ஸ்டூடியோவை சேர்ந்த விற்பனை பிரதிநிதிகள் மூலமாக பெறலாம்.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

ஏற்கனவே மஹிந்திரா எஸ்யூவி வைத்திருப்பவர்கள் அல்லது புதிதாக வாங்குபவர்களும் இந்த கஸ்டமைஸ் திட்டத்தின் மூலமாக அழகுப்படுத்திக் கொள்ள முடியும். பயன்படுத்தப்பட்ட காராக இருந்தால், நல்ல கண்டிஷனில் இருந்தால் மட்டுமே இதற்கு தகுதியானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தார், ஸ்கார்ப்பியோ, பொலிரோ தவிர்த்து டியூவி300, எக்ஸ்யூவி500 மற்றும் கேயூவி100 ஆகிய மாடல்களுக்கும் கஸ்டமைஸ் பேக்கேஜுகளை வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மஹிந்திரா காரை உங்க விருப்பம்போல் மாற்றிக் கொள்ள ஆசையா? எங்கேயும் அலைய வேண்டாம்!

சிறப்பு பேக்கேஜுகள் மட்டுமின்றி, வித்தியாசமான க்ரில் அமைப்புகள், ஹெட்லைட்டுகள், டெயில்லைட்டுகள், அலாய் வீல்கள், ரோல் பார்கள், ராக் ஸ்லைடர்கள், புல் பார்கள், விஞ்ச், ஸ்நோர்க்கெல் உள்ளிட்ட பல ஆக்சஸெரீகளை தனியாகவும் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

உட்புறத்திற்கு ஜிபிஎஸ் சாதனம், பின் இருக்கை பயணிகளுக்கான டிவி திரைகள், பிரிமீயம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, மிதியடிகள், மூட் லைட் சிஸ்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has launched a new website, which offers customers modification & customisation options of their various SUVs in India. The modification and customisation options are currently offered on the Thar, Scorpio and Bolero models.
Story first published: Saturday, August 29, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X