மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

மஹிந்திரா எஸ்யூவி கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சர்வீஸ் முகாமில் வழங்கப்படும் சேமிப்புச் சலுகைகள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

குளிர்காலத்தில் கார்களுக்கு தேவைப்படும் சில முக்கிய பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்யும் வகையில் இந்த சர்வீஸ் முகாமிற்கு மஹிந்திரா ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் வரும் 19ந் தேதி முதல் நாடுமுழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா சர்வீஸ் மையங்களிலும் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம் நடக்க உள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

இந்த சர்வீஸ் முகாமில் மஹிந்திரா கார்களுக்கு 75 விதமான பரிசோதனைகள் செய்யப்படும். அதாவது, வழக்கமான பரிசோதனைகள் தவிர்த்து, குளிர்காலத்திற்கு தேவைப்படும் சில சிறப்பு சர்வீஸ் முறைகளும் பின்பற்றப்படும்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மீது 5 சதவீத கழிவும், லேபர் கட்டணம் மீது 10 சதவீத கழிவும், ஹெட்லைட் க்ளினீங் மற்றும் மேக்ஸிகேர் விண்ட்ஷீல்டு பாலிஷ் செய்வதற்கான கட்டணத்தில் 25 சதவீதம் வரையிலும் கழிவு பெறும் வாய்ப்பு உள்ளது.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

இதில், வின்ட்ஷீல்டு கண்ணாடி மீதுள்ள கீறல்கள் மற்றும் தெறிப்புகளை சரிசெய்து தருவதற்கான மேக்ஸிகேர் பாலிஷ் ட்ரீன்மென்ட் மீது அதிகபட்ச கழிவு கிடைப்பதுடன், ஒரு சில ஆண்டுகள் ஓடிய வாகனங்களுக்கு இது சிறப்பானதாக அமையும். இதன்மூலமாக, சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் உள்ள அழுக்குகள் மற்றும் பனி படர்ந்தது போன்ற தன்மையை அகற்றுவதற்கான விசேஷ முறை பின்பற்றப்படுகிறது. அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் மூலமாக செய்யப்படும் இந்த பணியின் மூலமாக ஹெட்லைட் க்ளஸ்ட்டர் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படுவதால், இரவு நேரத்தில் ஹெட்லைட்டின் முழுமையான பிரகாசத்தை பெற வாய்ப்பு ஏற்படும்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

இதுதவிர்த்து, ஹெட்லைட்டுகள், பேட்டரி, டயர்கள், பிரேக்குகள் மற்றும் ஆயில் அளவு குறித்த பரிசோதனைகளும் செய்யப்படும். இந்த வழக்கமான பராமரிப்புப் பணிகள் மூலமாக அதிக பாதுகாப்புடன் இயக்குவதற்கு வழி வகை ஏற்படும்.

மஹிந்திரா கார்களுக்கு சிறப்பு சர்வீஸ் முகாம்... முழுவிபரம்!

இந்த சர்வீஸ் முகாமில் கலந்து கொண்டு தங்களது மஹிந்திரா எஸ்யூவியை சர்வீஸ் செய்ய விரும்புவோர் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையம் அல்லது டீலரை தொடர்பு கொண்டு முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Most Read Articles
 

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has organised winter service camp and it will be held from 14-19 December 2020.
Story first published: Monday, December 14, 2020, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X