மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்! ஏன் இந்த திடீர் அறிவிப்பு?

மஹிந்திரா தார் காரின் புக்கிங் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் அதன் தார் எஸ்யூவி ரக காரை கடந்த அக்டோபர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு யாரும் எதிர்பார்த்திராத மிகச் சிறந்த வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் தற்போது நிலவி வருகின்றது. மஹிந்திரா நிறுவனமே திகைத்து போகின்ற அளவிற்கு அக்காருக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

இம்மாதிரியான சூழ்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவி காருக்கான புக்கிங்கை நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தாரின் அனைத்து வேரியண்டிற்குமான புக்கிங்கும் நிறுத்தப்படவில்லை. ஏஎக்ஸ் சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கும் முதல் மூன்று ஆரம்ப நிலை வேரியண்டுகளின் விற்பனைக்கான புக்கிங் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

இது தற்காலிகமான தடை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மஹிந்திரா நிறுவனம் தார் காரை பல்வேறு விதமான தேர்வுகளில் வழங்கி வருகின்றது. இதில், ஏஎக்ஸ் வரிசையிலேயே விலை குறைவான மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

எனவேதான் இந்த வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஏஎக்ஸ் பெட்ரோல் எஸ்டிடி 6எஸ், ஏஎக்ஸ் பெட்ரோல் சாஃப்ட் டாப் 6எஸ் மற்றும் ஏஎக்ஸ் டீசல் சாஃப்ட் டாப் 6எஸ் ஆகிய தேர்வுகளின் புக்கிங் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பட்டியலாக கீழே காணலாம்.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..
தார் MT 4x4 4 சீட்டர் / 6 சீட்டர் விலை புக்கிங் நிலவரம்
AX Petrol STD Soft Top 6S ₹9.80 Lakh Closed
AX Petrol Soft Top 6S ₹10.65 Lakh Closed
AX Diesel Soft Top 6S ₹10.85 Lakh Closed
AXO Petrol 4S Convertible ₹10.90 Lakh Open
AXO Diesel 4S Convertible ₹12.10 Lakh Open
AXO Diesel 4S Hard Top ₹12.20 Lakh Open
தார் MT 4x4 4 சீட்டர் விலை புக்கிங் நிலவரம்
LX Petrol Hard Top ₹12.49 Lakh Open
LX Diesel Convertible Top ₹12.85 Lakh Open
LX Diesel Hard Top ₹12.95 Lakh Open
தார் AT 4x4 4 சீட்டர் விலை புக்கிங் நிலவரம்
LX Petrol Convertible Top ₹13.45 Lakh Open
LX Petrol Hard Top ₹13.55 Lakh Open
LX Diesel Convertible Top ₹13.65 Lakh Open
LX Diesel Hard Top ₹13.75 Lakh Open
மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

மஹிந்திரா தார் ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் எனும் இரு விதமான சீரிஸ்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தற்போது புக்கிங் நிறுத்தத்தால் ஏஎக்ஸ் பிரிவிற்கு சற்று கூடுதலான வரவேற்புக் கிடைத்து வருவது உறதியாகியுள்ளது. குறிப்பிடக் கூற வேண்டுமானால் எதிர்பார்த்திராத அளவிலான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

கடந்த அக்டோபர் மாதத்தின் மஹிந்திரா தார் புக்கிங் நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 20 யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருக்கின்றது. இது அனைத்து தேர்வுகளுக்குமானதாகும். இது மிகப்பெரிய விற்பனை விகிதம் ஆகும். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலே காணப்படுகின்றது. தற்போது வரை புக்கிங் செய்தவர்களுக்கே உரிய காரை டெலிவரி கொடுக்க ஏழு மாதங்கள் வரை ஆகும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

இந்த பிரமாண்ட வரவேற்பே தற்போது ஆரம்பநிலை வேரியண்டின் புக்கிங்கை மஹிந்திரா நிறுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதாவது, இன்னும் புக்கிங் பெற்றால் இன்னும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு காலம் அதிகரிக்கக்கூடும். இதை உணர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே புக்கிங் தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

இதன்மூலம் காத்திருப்பு காலத்தை மஹிந்திராவால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மஹிந்திரா தார் உற்பத்தி திறனானது மாதம் ஒன்றிற்கு 2 ஆயிரம் யூனிட்டுகள் ஆகும். இதனை வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் 3,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகின்றது.

மஹிந்திரா தார் புக்கிங் நிறுத்தம்..? அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் கலக்கம்!! ஏன் இந்த திடீர் அறிவிப்பு தெரியுமா?..

இருப்பினும், அதிரடியாக காத்திருப்பு காலத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் ஏஎக்ஸ் பிரிவின் ஆரம்பநிலை வேரியண்டுகளுடைய புக்கிங்கை அது நிறுத்தி வைத்திருக்கின்றது. இந்த தார் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் நான்கு நாட்களிலேயே 9 ஆயரிம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தொடர் அமோகமான வரவேற்பை இக்கார் பெற்று வருகின்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Closed Thar AX Base Variant Booking Temperley. Read In Tamil.
Story first published: Friday, November 6, 2020, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X