போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

முதல் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மஹிந்திரா தாரின் எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

மஹிந்திரா தார், கடந்த சில வருடங்களில் ஆட்டோமோட்டிவ் உலகின் பிரபலமான பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது. தாரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த வாகனத்திற்கான காத்திருப்பு காலத்தை 6 மாதங்களாக தயாரிப்பு நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

இந்த நிலையில் தற்போது ஆட்டோபுண்டிஸ் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள புள்ளி விபரங்களில், அக்டோபர் மாத அறிமுகத்தில் இருந்து மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 2,569 யூனிட் 2020 தார் மாதிரிகளை தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றியுள்ளது.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

இதுவரை 2,500க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புதிய தலைமுறை தாரை டெலிவிரி எடுத்துள்ளனர். இந்த வாகனத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் புதிய தாருடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதற்காக மெகா டெலிவிரி கேம்ப்களை மஹிந்திரா ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

தற்சமயம் தயாராக உள்ள வேரியண்ட்களை பொருத்து அவற்றை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வரிசைபடி வாகனம் டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரையும் மஹிந்திரா நேரடியாக தொடர்பு கொண்டு டெலிவிரியை உறுதிப்படுத்துகிறது.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

இந்த சந்திப்பின்போது டெலிவிரி செய்யப்படவுள்ள தேதி தோராயமாகவோ அல்லது துல்லியமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேவை அதிகரிப்பதை உணர்ந்து நாசிக் தொழிற்சாலையில் 2020 தாரின் தயாரிப்பு பணிகளை அதிகரிக்கும் முயற்சியிலும் மஹிந்திரா ஈடுப்பட்டு வருகிறது.

போட்டி போட்டு கொண்டு 2020 மஹிந்திரா தாரை வாங்கும் வாடிக்கையாளர்கள்!! விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது

இதனால் 2021 ஜனவரி மாதத்தில் இருந்து மாதத்திற்கு 2000 யூனிட்களில் இருந்து 3,000 யூனிட்களாக 2020 தார் தயாரிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிப்படவுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா தாரின் ஆரம்ப விலை அறிமுகத்தின்போது ரூ.9.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே தயாரிப்பு நிறுவனம் இதன் விலையை ரூ.40,000 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2,569 units of Mahindra Thar dispatched in the first month of its launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X