நம்ப முடியாத விலையில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

நம்ப முடியாத விலையில் புதிய இகேயூவி100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போ மூலமாக விற்பனைக்கு அறிமுகம் செய்து எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை அதிர வைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தை நாளுக்கு நாள் மிக வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆனால், அவை விலை ரூ.10 லட்சத்தை தாண்டுவதால், வெகுஜன வாடிக்கையாளர்களுக்கான மாடல்களாக இல்லை.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் அதிரடியாக புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடலாக வந்திருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் eKUV100 என்ற பெயரில் வந்துள்ளது.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த புதிய மாடலுக்கு ரூ.8.25 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மிக குறைவான பட்ஜெட்டிலான மின்சார எஸ்யூவி கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரில் 40kW திறன் கொண்ட மின் மோட்டார் உள்ளது. இந்த மின் மோட்டார் 54.4 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டது. மின் மோட்டார் ஆற்றல் முன்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரில் 15.9 kWh லிக்யூடு கூல்டு பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 5 மணி 45 நிமிடங்கள் பிடிக்குமாம்.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 147 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். எனவே, நகர்ப்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

குறைவான பட்ஜெட்டில் மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

சாதாரண மாடலில் இருந்து மின்சார மாடலை வேறுபடுத்தும் விதமாக, முன்பக்க க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா இகேயூவி100 எலெக்ட்ரிக் கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மின்சார கார் மாடலாக இருக்கும்.

Most Read Articles

English summary
Mahindra has launched eKUV100 electric SUV in India priced at Rs.8.25 lakh (Ex-Showroom, Delhi).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X