புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், எலக்ட்ரிக் மொபைலிட்டி லிமிட்டட் என்ற தனது புதிய ப்ராண்ட்டின் கார்ப்ரேட் ப்ராண்ட் அடையாளத்தையும், புதிய லோகோ மற்றும் 'ஸ்பார்க் தி நியூ' என்ற புதிய டேக்லைனையும் வெளியிட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் மொபைலிட்டி ப்ராண்ட் குறித்து விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில், தான் முதன்மை நிறுவனங்களுள் ஒன்றாக வரவேண்டும் என்ற இரு வரிகளே மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய ப்ராண்ட் துவக்கத்திற்கு காரணமாக உள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

புதிய அடையாளம் உள்ளிட்டவை இந்த புதிய ப்ராண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதால், மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து இனி அறிமுகமாகும் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களும் மற்றும் ஹார்ட்வேர் தீர்வுகளும் எம்இ என்ற ப்ராண்ட்டில் இருந்தும், சாஃப்ட்வேர் தீர்வுகள் நெமோ என்ற ப்ராண்ட்டில் இருந்தும் வெளியிடப்படவுள்ளன.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

மேலும் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய அடையாளம் கொடுக்கப்பட்டிருப்பதால், நிச்சயம் டிஜிட்டல் பாகங்களுடன் வடிவமைக்கப்பட்ட லோகோவை தான் மஹிந்திரா நிறுவனம் வழங்க திட்டமிட்டிருக்கும்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

ஏனெனில் இந்த புதிய லோகோ, இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாட்டு சந்தைகளிலும் இந்நிறுவனத்தின் அடையாளமாக திகழவுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இவி கார்கள் இந்திய சாலையில் மொத்தம் 200 மில்லியன் கிமீ பயணத்தை நிறைவு செய்துள்ளதை இந்த ப்ராண்ட் அறிமுகம் நினைவுக்கூறும் விதமாக உள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் இந்த 200 மில்லியன் கிமீ பயணத்தால் இந்தியாவில் 22,000 மீட்டர் டன்கள் கார்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வு தடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வெர்சன், கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தை கொண்டிருப்பதின் மூலம் கஸ்டமைஸ்ட் எலக்ட்ரிக் மொபைலிட்டி தீர்வுகள் அரங்கிலும் முன்னணி நிறுவனத்தின் ப்ராண்ட்டாக விளங்கவுள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இ-மொபைலிட்டி பிரிவில் உலகம் முழுவதும் உள்ள ஒரிஜினல் பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் மஹிந்திரா நிறுவனம் சிறந்த பார்ட்னராக விளங்க இந்த புதிய அடையாளம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இதுகுறித்து மஹிந்திரா எலக்ட்ரிக் ப்ராண்ட்டின் முதன்மை நிர்வாக இயக்குனர் மகேஷ் பாபு கூறுகையில், கடந்த பத்தாண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் தொழிற்நுட்பத்தில் கிடைத்த அனுபவங்களுடன் இன்று உங்கள் முன்னால் உள்ளோம்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இந்தியா முழுவதும் இவி வாகனங்களை வெளியிடவும், எங்களது தொழிற்நுட்பங்களை உலக சந்தைக்கு எடுத்து செல்லவும் நாங்கள் முழுவதும் தயாராகவுள்ளோம். எங்களது இந்த புதிய நிலை, எங்களது லட்சியம் என்பதற்கு எங்களது முன்னோடிகள் தான் சாட்சிகளாய் உள்ளனர்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இதுதான் எங்களை கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தை புதுமையாக மற்றும் விரைவாக உருவாக்க வலியுறுத்தியது. இதனால் எங்களால் வித்தியாசான தயாரிப்புகளை சமூகத்திற்கு உறுதியாக வழங்க முடியும் என கூறினார்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இந்த புதிய அடையாளம் மஹிந்திரா எலக்ட்ரிக் ப்ராண்ட்டிற்கு அங்கீகாரத்தை பெற்று தரும் என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் எண்ணுவது Mr.மகேஷ் பாபுவின் இந்த பேச்சில் இருந்து தெரிகிறது. இதற்காக தான் அவர்கள், 'ஸ்பார்க் தி நியூ' என்ற சிறப்பான டேக்லைன்-ஐ தேர்ந்தெடுத்துள்ளனர்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இந்த டேக்லைனின் பொருள் மஹிந்திராவிற்கு மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களில் தயாரிப்பில் ஈடுப்படவுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த புதிய லோகோவில் எலக்ட்ரிக் என்ற வார்த்தை, மஹிந்திரா லோகோவின் வழக்கமான எழுத்து ஸ்டைலில் தான் உள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இது இந்நிறுவனத்தின் சீரான தன்மையை வெளிக்காட்டுகிறது. மேலும் எலக்ட்ரிக் வார்த்தை சிறிதாக வடிவமைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனத்திற்கு இடையேயான நெருங்கிய பிணைப்பை காட்டுகிறது. சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மஹிந்திராவின் இந்த புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

மஹிந்திரா எழுத்திற்கு சிவப்பு கொடுக்கப்பட்டிருப்பது, புதிய எலக்ட்ரிக் ப்ராண்ட் அதன் முன்னோடி நிறுவனத்துடன் தான் உள்ளது என்பதை சொல்வதுபோல் உள்ளது. எலக்ட்ரிக் வார்த்தைக்கு, எலக்ட்ரிக் மொபைலிட்டி உலகின் வழக்கமான நீலம் நிறம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

ஸ்பார்க் தி நியூ என்ற டேக்லைன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குத்தாரர்களை வசிகரிப்பதற்காக மஹிந்திரா நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கும். ஏனெனில் இந்த வரியை படிக்கும்போது உண்டாகும் அதிர்வுகள் புதிய தொடக்கத்திற்கும், புதிய நினைவுகளுக்கும் மற்றும் புதிய தீர்வுகளுக்கும் வழிவகுக்கும்.

புதிய லோகோ & ப்ராண்ட்டில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா..!

இவ்வாறான ஆழமான கருத்துகளை கொண்ட வார்த்தைகள் மற்றும் டிசைன்களாக தான் மஹிந்திரா நிறுவனம் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளது. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் ப்ராண்ட் இந்திய ஆட்டோமொபைல் துறையில் சிறந்து விளங்க ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Electric Unveils New Brand Identity, Logo, And Tagline: Details
Story first published: Friday, January 31, 2020, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X