மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்? - புதிய தகவல்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

இந்தியாவில் மின்சார கார் மார்க்கெட்டில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த சந்தையில் துண்டை போட்டு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் தீவிரமாக உள்ளன. அந்த வகையில், இந்திய மின்சார கார் மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் மஹிந்திரா நிறுவனம் தனி நபர் பயன்பாட்டு சந்தைக்கு தகுந்த மாடலை களமிறக்க ஆயத்தமாகி வருகிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

இந்த நிலையில், அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக காடிவாடி தள செய்தி தெரிவிக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

தற்போது விற்பனையில் வலுவான நிலையில் உள்ள டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேர் எதிராக இந்த புதிய எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். அதேநேரத்தில், டாடா நெக்ஸான் எஸ்யூவியைவிட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இருந்து வேறுபடும் வகையில் க்ரில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் கார் என்பதை பரைசாற்றும் வகையில் நீல வண்ணத்திலான அலங்கார விஷயங்களுடன் தனித்துவமாக இருக்கிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். ஆனால், இந்த புதிய எஸ்யூவி 370 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும், இரண்டு விதமான பேட்டரி திறன் கொண்டதாக வர இருப்பதாகவும் தெரிகிறது.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கான ஸ்கேளபில் மோடுலர் ஆர்க்கிடெக்ச்சர் 350 என்ற பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையின் கீழ் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் காரின் மின் மோட்டார் 204 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி எப்போது அறிமுகம்?

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to report, Mahindra is planning to launch eXUV300 SUV in India by second half of next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X