ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ப்ரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான ஃபன்ஸ்ட்டர் விரைவில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலின் புதிய டீசர் வீடியோ ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய டீசரில் ஃபன்ஸ்ட்டர் இவி கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தவுள்ள 4 புதிய எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றாகும்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரில் பெரும்பான்மையான தகவல்கள் வெளிவரவில்லை என்றாலும், டிசைன் அமைப்பு உள்ளிட்ட சில முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த புதிய இவி கார் குறித்து வெளியாகிவரும் தகவலில் இந்த மாடல் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை காரின் எலக்ட்ரிக் வெர்சன் என கூறப்பட்டு வருகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் பிரிவு நிபுணர்கள் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களில் வழங்கவுள்ள தொழிற்நுட்பங்களை இந்த இவி மாடலில் வழங்குவார்கள் என்று மட்டும் எதிர்பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

தற்சமயம் உள்ள எலக்ட்ரிக் எஸ்யூவிகளில் மிகவும் சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மாடலாக இந்த மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கார் அறிமுகமாகவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் சக்கரத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில் மொத்தம் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

இதன் மூலம் இந்த கார் ஆல்-வீல் ட்ரைவ் மோடில் தயாரிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. இந்த 4-எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு 60kWh ஆற்றல் கொண்டதாகும். இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பு அதிகப்பட்சமாக ஃபன்ஸ்ட்டர் எஸ்யூவி மாடலுக்கு 230kW அல்லது 313 பிஎச்பி பவரை வழங்கவல்லது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

இத்தகைய அதிகப்படியான ஆற்றல் அளவுடன் இயங்கவுள்ளதால், இந்த கார் 0-லிருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். ஏற்கனவே கூறியதுபோல் இந்த எஸ்யூவி மாடலுடன் மேலும் சில எலக்ட்ரிக் கார்களும் ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனத்தின் பெவிலியனில் காட்சிக்காக வைக்கப்படவுள்ளன.

https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMahindraAutomotiveIndia%2Fvideos%2F124949848766330%2F

இந்த வகையில் வாடிக்கையாளர்களின் அதிக வரவேற்பை பெற்ற எலக்ட்ரிக் மாடலாக இ-கேயூவி300 இந்த வாரத்தில் அறிமுகமாகவுள்ளது. சப் 4-மீட்டர் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள எக்ஸ்யூவி300 மாடலின் இந்த புதிய எலக்ட்ரிக் வெர்சன் டாடா நெக்ஸான் இவி மாடலுக்கு போட்டியாக களம் காணவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

டாடா நெக்ஸான் இவி மாடல் இந்திய மார்க்கெட்டில் ரூ.14 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட இதே விலையை தான் மஹிந்திரா இ-எக்ஸ்யூவி300 காரும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

மஹிந்திரா இ-கேயூவி300 மாடல் ஏற்கனவே 2018ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்த மாடலில் இருந்து விரைவில் காட்சிக்காக வைக்கப்படவுள்ள மாடலில் அதிகளவில் தோற்ற வேறுப்பாட்டை எதிர்பார்க்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மஹிந்திரா ஃபன்ஸ்ட்டர் இவி கான்செப்ட்..!

இந்த வாரத்தில் டெல்லியில் துவங்கப்படவுள்ள ஆட்டோ எக்ஸ்போவின் மூல காரணங்களில் இவி கார்களை இந்திய சந்தையில் பிரபலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. இதனை சரியாக புரிந்துக்கொண்டு 4 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை காட்சிப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Funster Teaser Revealed
Story first published: Monday, February 3, 2020, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X