மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம் அதன் கேயூவி100 நெக்ஸ்ட் காரின் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்டை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ-எஸ்யூவி ரக காராக கேயூவி100 நெக்ஸ்ட் விளங்குகிறது. இதன் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

இந்த புதிய இரட்டை-நிறம் கேயூவி100 நெக்ஸ்ட் காரின் டாப் கே8 ட்ரிம்மிற்கு மட்டுமே வழங்கப்படும். ஒற்றை நிறத்தை காட்டிலும் புதிய இரட்டை-நிறத்தில் கே8 ட்ரிம்மின் விலை வெறும் ரூ.7,500 மட்டுமே அதிகமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் இரட்டை-நிற வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் சில்வர் உடன் கருப்பு மேற்கூரை மற்றும் சிவப்பு உடன் கருப்பு மேற்கூரை என்ற இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

இரட்டை-நிற பெயிண்ட்டை தவிர்த்து கேயூவி100 நெக்ஸ்ட்டின் கே8 ட்ரிம்மின் புதிய இரட்டை-நிற வேரியண்ட்டில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. கேயூவி100 மைக்ரோ-எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் மூடுபனி விளக்குகள், எல்இடி டிஆர்எல்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

இவற்றுடன் 15 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், பியானோ கருப்பு நிறத்தில் பின்பக்க கதவு கைப்பிடிகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், உட்புற கதவு கைப்பிடிகளில் மூட் விளக்குகள், இரண்டாவது இருக்கை வரிசையில் ஆர்ம்-ரெஸ்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரண்டாம் வரிசை ஹெட்ரெஸ்ட், குளிர்ச்சியான க்ளோவ்-பாக்ஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அனைத்து கதவுகளிலும் பெடல் விளக்குகள் உள்ளிட்டவற்றையும் மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்குகிறது.

மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்! ரூ.7.35 லட்சத்தில் அறிமுகம்

கேயூவி100 நெக்ஸ்ட் காரில் 1.2 லிட்டர் எம்ஃபால்கான் பெட்ரோல் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாஜ்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra KUV100 NXT dual-tone prices start at Rs 7.35 lakh
Story first published: Wednesday, October 21, 2020, 22:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X