Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எப்பேர்பட்ட சாலையாக இருந்தாலும் இந்த கார் அசால்ட் செய்துவிடும்... அட்டகாசமான காராக மாறிய மஹிந்திரா இன்வேடர்...
எந்த மாதிரியான காராக இருந்தாலும் அதை அசால்ட் செய்யக்கூடிய திறனுக்கு மஹிந்திரா இன்வேடர் கார் மாடிஃபைச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா நிறுவனத்தின் இன்வேடர் கார் ஒன்று ஆஃப் ரோடு பயணத்திற்கு ஏற்ற வாகனமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் இந்த கார் எந்தவிதமான சாலையாக இருந்தாலும் அசால்ட் செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றது. அதாவது, மாடிஃபிகேஷன் செயலால் இந்த கார் மிகவும் அட்டகாசமான தோற்றம் மற்றும் செயல்திறனைப் பெற்றிருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் இன்வேடர் எஸ்யூவி-யும் ஒன்று. இது தற்போது விற்பனையில் இல்லை. இருப்பினும், ஒரு சிலர் இக்காரைப் பயன்படுத்தி வருகின்றனர். இது ஆஃப்-ரோடு பயண பிரியர்களின் மிகவும் பிடித்தமான வாகனம் என்பதால் அவர்களிடத்தில் தற்போதும் இக்கார் பயன்பாட்டில் இருக்கின்றது.

அந்தவகையிலான ஓர் மஹிந்திரா இன்வேடர் காரை தற்போது அட்டகாசமான முரட்டுத் தனமான ஸ்டைலுக்கு உருமாறியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரே மிகவும் கவர்ச்சியான ஸ்டைலுக்கு மாற்றியமைத்திருக்கின்றார்.

புதிய தோற்றத்திற்கு பழைய அலங்காரப் பொருட்கள் பல நீக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலாக புதிய நவீன கூறுகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் புதிய மஞ்சள் நிறம், சாலையில் இந்த கார் எங்கிருந்தாலும் பார்வையாளர்களைக் கவரக் கூடிய வகையில் இருக்கின்றது.

மேலும், இக்காரில் புதிய பம்பர், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், இரு மின் விளக்குகள் முன் பக்க பம்பர் குவார்டில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மின் விளக்குகள் போதாதென்று மேற்கூரையின் முன் பக்க நுனி பகுதியில் நீளமான எல்இடி மின்விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்றது.

இத்தனை மின் விளக்குகள் இந்த காருக்கு தேவைதானா?, என்ற கேள்வி எழும்பலாம். காரின் கவர்ச்சியான மற்றும் ஆக்ரோஷமான தோற்றத்திற்கு இந்த கூறுகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதைத் தொடர்ந்து, அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கக் கூடிய வகையில் பெரிய 35 இன்ச் அளவிலான டயர்கள் நான்கு வீல்களிலும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த டயர் ஆகும். அதிக பிடிமானத்தை காருக்கு வழங்கக்கூடியதும்கூட. இந்த பெரிய இன்ச் டயரால் காரின் உயரம் 8-9 இன்ச் வரை உயர்ந்திருக்கின்றது. இதனால் கிரவுண்ட் கிளியரண்ஸ் முன்பைக் காட்டிலும் உயர்ந்திருக்கின்றது. எனவேதான் இக்கார் என்னமாதிரியான சாலையாக இருந்தாலும் அசால்ட் செய்துவிடும் என கூறப்படுகின்றது.

காரின் வெளிப்பகுதியில் செய்யப்பட்டதைப் போலவே உட்பகுதியிலும் சில சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் இருக்கைகள் மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும், அனைத்து கூறுகளும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன. இத்துடன், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃபர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இத்துடன், சூப்பர் எஞ்ஜின் திறனுக்காக இக்காரில் ஸ்கார்பியோ நிறுவனத்தின் டிஐ டர்போ டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. மேலும், கேஅண்ட்என் ஏர் ஃபில்டர்கள் புதிதாக இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த மாடிஃபிகேஷன் நம் மனதைக் கவர்கின்ற வகையில் இருந்தாலும், இதுபோன்று வாகனங்களை மாடிஃபை இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
Courtesy:Weekend On Wheels #Wow