எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசுரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

மஹிந்திரா எஸ்யூவி ஒன்று, மாடிஃபிகேஷன் மூலம் அசுரனாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த காலங்களில் பல்வேறு எஸ்யூவிக்களை மஹிந்திரா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒன்றுதான் மஹிந்திரா இன்வேடர் (Mahindra Invader). இது 3 டோர் எஸ்யூவி ரக கார் ஆகும். பின் பகுதியில் சாஃப்ட் டாப் உடன் மஹிந்திரா இன்வேடர் விற்பனை செய்யப்பட்டது.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

ஆனால் தேவை குறைவாக இருந்த காரணத்தால், மஹிந்திரா இன்வேடர் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. எனினும் ஆஃப் ரோடு ஆர்வலர்கள் பலர் இன்வேடரை வாங்கினார். அவர்களில் சிலர் இன்னமும் இன்வேடரை பராமரித்து வருகின்றனர். அத்துடன் இன்னும் ஆஃப் ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு இன்வேடரை மாடிஃபிகேஷன் செய்துள்ளனர்.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

இந்த சூழலில், மஹிந்திரா இன்வேடரில் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாடிஃபிகேஷன்கள் தொடர்பான காணொளி ஒன்று யூ-டியூப்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Weekend On Wheels #Wow என்னும் யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. எப்பேர்பட்ட மிக சவாலான ஆஃப் ரோடு சூழ்நிலைகளையும், எதிர்கொள்ளும் வகையில் இந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

இந்த மஹிந்திரா இன்வேடரில் என்னென்ன மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ள என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் வெளிப்புறத்தில் இருந்து தொடங்குவோம். இந்த கார் பிரத்யேகமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வர்ணம் காருக்கு நல்ல தோற்றத்தை வழங்குகிறது. இந்த மாடிஃபிகேஷன் பணிகளில், ஹெட்லேம்ப், முன்பக்க க்ரில் ஆகியவை மாற்றப்படவில்லை.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

கார் வாங்கும்போது இருந்த அதே ஹெட்லேம்ப்பையும், முன்பக்க க்ரில்லையும் அப்படியே விட்டுள்ளனர். ஆனால் முன் பகுதியில் ஆஃப் ரோடு பம்பர் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இது முகப்பு பகுதிக்கு மிகவும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. அதன் மையப்பகுதியில் கூடுதல் பிரகாசத்திற்காக 2 துணை விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

மேலும் அதற்கு கீழாக எல்இடி பனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பம்பரிலேயே எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டர்ன் இன்டிகேட்டர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. காருடன் வந்த பம்பரை முற்றிலுமாக நீக்கி விட்டு, அப்ரோச் மற்றும் டிபார்சர் ஆங்கிளை அதிகரித்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரை, மிக கம்பீரமான தோற்றத்தில், 35 இன்ச் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் கார் 8-9 இன்ச்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காரின் சஸ்பென்ஸன் பணிகளை அயர்ன்மேனின் யூனிட்கள் கவனித்து கொள்கின்றன. இந்த காரின் மேற்கூரையில் நீளமான எல்டிஇ பார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

எப்பேர்பட்ட மோசமான சாலையிலும் அசால்டாக செல்லும்... மஹிந்திரா காரை அசூரனாக மாற்றிய மாடிஃபிகேஷன்...

அத்துடன் காரில் ஸ்னோர்கெல் பொருத்தப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த காரில் வீல் ஆர்ச்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின் பகுதியிலும் ஆஃப் ரோடு பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆஃப்டர் மார்க்கெட் எல்இடி டெயில்லைட்களும் வழங்கப்பட்டுள்ளன. டெயில்கேட்டுடன் இணைக்கப்பட்ட ஸ்பேர்வீலையும் இந்த கார் பெற்றுள்ளது.

இந்த காரின் கதவுகளை திறக்கும்போது, உள்ளே ஏறுவதற்கு வசதியாக, படிக்கட்டு ஒன்று வெளியே வருகிறது என்பது குறிப்பிட்டே ஆக வேண்டிய விஷயமாகும். கதவை சாற்றும்போது அந்த படிக்கட்டு உள்ளே சென்று விடுகிறது. இதை இந்த காரின் சிறப்பம்சமாக குறிப்பிடலாம். இவ்வாறு இந்த காரில் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த மாடிஃபிகேஷன்களும் மிரட்டலாக உள்ளன.

Most Read Articles
English summary
Mahindra Invader SUV Modification Full Details - Watch Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X