Just In
- 19 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் கூட்டு வைக்கும் மஹிந்திரா! எதற்காக தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கூட்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நாட்டின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் இஸ்ரேல் நாட்டை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் (REE Automotive) நிறுவனத்துடன் கைக் கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம்.

அது குறிப்பாக வர்த்தக ரீதியாக இயங்கக்கூடிய வாகன மாடலிலேயே மின்வாகனத்தை தயாரித்து வருகின்றது. எனவே, இந்தியா மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களின் கூட்டணியில் மின்சார வர்த்தக வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட இருக்கின்றன.

அவ்வாறு தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவிற்காக மட்டுமின்றி உலக நாடுகளுக்காகவும் சேர்த்தே உருவாக்கப்பட இருக்கின்றன. ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தயாரித்து வரும் மின் வாகனங்கள் நவீன காலத்திற்கு ஏற்ற ஸ்டைல் மற்றும் அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, அந்த வாகனத்தைக் கட்டமைக்கும் விதமும் மாடர்ன் உலகத்திற்கு ஏற்றதாக இருக்கின்றது. எனவேதான் மஹிந்திரா மற்றும் ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் கூட்டணியில் உருவாகும் வர்த்தக மின்சார வாகனங்கள் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

உலகமே மின் வானக பயன்பாட்டிற்கு மாறி வருகின்றது. ஆனால், இந்தியாவில் மின் வாகன விற்பனைக் குழந்தைப் பருவத்திலேயேக் காணப்படுகின்றது. இதற்கு போதிய கட்டமைப்பு வசதி இல்லாதது மற்றும் மின் வாகனங்கள் உச்சபட்ச விலையைக் கொண்டிருப்பதுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இந்த அவல நிலையைப் போக்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம், இஸ்ரோல் நிறுவனத்துடன் இணைந்து வர்த்த மின் வாகனங்களைத் தயாரிக்கி இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் தற்போது வர்த்தக துறைச் சார்ந்து இயங்கக்கூடிய வாகன மாடல்களில் மின்சார வெர்ஷன் மிகக் குறைவாகவே கிடைக்கின்றது. இந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கூட்டணி தொடங்கப்பட்டிருக்கின்றது.

இரு கூட்டணியில் உருவாகும் மின்சார வாகனத்தில், இன்டர் வீல் இணைப்பு இல்லாத ஸ்டியரிங் சிஸ்டம், சிறப்பான சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், இது சரக்கு மற்றும் வர்த்தக வாகனங்கள் என்பதால் அதன் மின் மோட்டாருக்கு அதிக இழுவை திறனும் வழங்கப்பட இருக்கின்றது.

இதுதவிர ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும் அந்த மின் வாகனத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஆட்டோ இன்டலிஜென்ஸ் திறன் வழங்கப்பட இருக்கின்றது. இது, அந்த சக்கரங்களைப் பாதுகாக்க உதவும்.

மேலும், பல பயன்பாட்டை வழங்கக்கூடிய வகையில் அதன் உடல் கட்டமைப்பு செய்யப்பட இருக்கின்றது. இவையே மஹிந்திரா கூட்டணியில் உருவாக இருக்கின்ற மின்சார வர்த்தக வாகனத்தின் சிறப்புகளாக இருக்கின்றன. வருடத்திற்கு 2 லட்சங்கள் முதல் 2.50 லட்சம் யூனிட் வரை மின்சார வாகனங்கள் தயாரிக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

உள் மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான ஒட்டுமொத்த தயாரிப்புகளுமே இதிலேயே அடங்கும். மேலும், இந்த கூட்டணியில் தானியங்கி வாகனங்களைத் தயாரிக்கவும் மஹிந்திரா திட்டமிட்டிருக்கின்றது. ஆனால், அதனை இந்தியாவில் அது களமிறக்குமான என்பது தெரியவில்லை.

அதேசமயம், பிற வர்த்க மின்சார வாகனங்கள் இந்தியாவில் களமிறக்கப்படுவதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறப்படுகின்றது. ஆனால், அவை எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய உறுதியான தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் இந்த மின்சார வாகனங்கள் 2021ம் ஆண்டு அல்லது 2021ம் ஆண்டிற்கு பின்னர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.