மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்!

மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் முக்கிய சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சில மாடல்கள் உள்ளன. அதில், மிக முக்கிய இடத்தை மஹிந்திரா மராஸ்ஸோ பெற்றிருக்கிறது. மாருதி எர்டிகாவுக்கும், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கும் இடையிலான ரகத்தில் இந்த மாடல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

போதுமான இடவசதி, எஞ்சின் மற்றும் பட்ஜெட் ஆகிய அனைத்திலும் இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக தற்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

கொரோனாவால் சந்தைக்கு வருவது சற்று தாமதம் ஏற்பட்டாலும், பண்டிகை காலத்தில் புதிய எம்பிவி கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த கார் கூடுதல் தேர்வாக வந்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலானது M2, M4+ மற்றும் M6+ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், M2 என்ற குறைந்தபட்ச வசதிகள் கொண்ட பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.11.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இதுதவிர்த்து, M4+ வேரியண்ட்டிற்கு ரூ.12.37 லட்சமும், M6+ வேரியண்ட்டிற்கு ரூ.13.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 மாடலில் வழங்கப்பட்டு வந்த M8 வேரியண்ட் பிஎஸ்-6 மாடலில் வழங்கப்படவில்லை.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் விரைவில் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலின் டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லை. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா, 17 அங்குல விட்டமுடைய டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடலில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரிமீயம் சீட் கவர்கள், பின் இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் அமைப்பு, ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஏர்பேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரின் பிஎஸ்6 மாடலானது மரைனர் மெரூன், ஐஸ்பெர்க் ஒயிட், ஷிம்மரிங் சில்வர், ஓசியானிக் பிளாக் மற்றும் அக்வா மரைன் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்-6 காரை முன்பதிவு செய்பவர்களுக்கு மிக விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளது. ஆன்லைன் மற்றும் டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra & Mahindra has launched the BS6-compliant Marazzo MPV in the Indian market. The new Mahindra Marazzo BS6 is now offered with a price tag of Rs 11.25 lakh, ex-showroom (Delhi).
Story first published: Wednesday, August 26, 2020, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X