மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

பிஎஸ்6 தரத்தில் மஹிந்திரா மராஸ்ஸோ மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த பிஎஸ்6 காரின் வேரியண்ட்களை தயாரிப்பு நிறுவனம் மறுசீரமைத்துள்ளது. இதுகுறித்து ஜிக்வீல்ஸ் செய்தி தளம் வெளியிட்டுள்ள விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

எம்பிவி ரக காரான மராஸ்ஸோவின் பிஎஸ்6 வெர்சனுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே டீலர்ஷிப்களில் ரூ.25,000 என்ற முன் தொகையுடன் துவங்கிவிட்டன. இதனால் மிக விரைவில் ஷோரூம்களை இந்த பிஎஸ்6 மாடல் வந்தடையவுள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

இந்த நிலையில் தான் தற்போது பிஎஸ்6 மராஸ்ஸோ காரின் வேரியண்ட்கள் மறுசீரமைக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கையால் மராஸ்ஸோ எம்பிவியின் ட்ரிம்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. எம்2, எம்4+ மற்றும் எம்6+ ஆகியவை இந்த மூன்று ட்ரிம்கள் ஆகும்.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

இதில் எம்2 மட்டும் தான் மராஸ்ஸோ பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்டு வந்தது. இதன் விலை பிஎஸ்6 அப்டேட்டினால் ரூ.1.01 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டும் எம்4 மற்றும் எம்6 என்ற பெயரில் விற்பனை செய்யப்ப்பட்டு வந்தன. மேலும் எம்8 ட்ரிம்-மும் அப்போது விற்பனை செய்யப்பட்டது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

ஆனால் இந்த டாப் ட்ரிம் மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலுக்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த பிஎஸ்6 மாடலின் அதிகப்பட்ச விலை ரூ.13.59 லட்சமாக குறைந்துள்ளது. இந்த எக்ஸ்ஷோரூம் விலையில் எம்6+ ட்ரிம் 8 இருக்கைகளுடன் வழங்கப்படும். காரின் ஆரம்ப விலை ரூ.11.01 லட்சமாகும்.

Variant BS4 Price BS6 Price Difference
M2 7/8 Seater Rs10 Lakh ₹11.01 Lakh ₹1,01 Lakh
M4 7/8 Seater ₹11.56 Lakh / ₹11.64 Lakh - -
M4+ 7/8/ Seater - ₹12.37 Lakh / ₹12.45 Lakh -
M6 7/8 Seater ₹13.09 Lakh / ₹13.17 Lakh - -
M6+ 7/8 Seater - ₹13.51 Lakh / ₹13.59 Lakh -
M8 7/8 Seater ₹14.68 Lakh / ₹14.77 Lakh - -
மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

ட்ரிம்களை பொறுத்து வழங்கப்படவுள்ள வசதிகள் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் மராஸ்ஸோவின் எம்4+ வேரியண்ட்டும் தற்போது ப்ளூடூத் மியுசிக் சிஸ்டம் மற்றும் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளதாக டீலர்ஷிப்களில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

அதேபோல் மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் நார்மல் மோடில் 121 பிஎச்பி பவரையும், ஈக்கோ மோடில் 100 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் என ஆர்டிஓ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் தொடர்ந்துள்ளது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

மேலும் இந்த எம்பிவி காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான பெட்ரோல் என்ஜின் தேர்வையும் வழங்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மராஸ்ஸோவில் பொருத்தப்பட்டிருந்த 1.5 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 163 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது.

மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 மாடலின் ஆரம்ப விலை 1 லட்ச ரூபாய் அதிகரிப்பு...

அதேபோல் இரு என்ஜின் தேர்வுகளுக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்காலத்தில் வழங்கப்படும் என தெரிகிறது. பிஎஸ்6 டீசல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளை தவிர்த்து பிஎஸ்6 மராஸ்ஸோ மாடலின் இயந்திர பாகங்களில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo BS6 Priced From Rs 11.01 Lakh, Variants Rejigged
Story first published: Tuesday, August 11, 2020, 21:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X