முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் பிரபலமான மராஸ்ஸோ மாடலின் பெட்ரோல் வேரியண்டை விற்பனைக்கு கொண்டுவர தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் மராஸ்ஸோ பெட்ரோல் மாடல் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

மஹிந்திரா நிறுவனம் முதன்முதலாக கடந்த 2018ல் மராஸ்ஸோ மாடலை இந்திய சந்தைக்கு கொண்டுவந்தது. ஆனால் அப்போதில் இருந்து தற்போது வரை மராஸ்ஸோ கார் டீசல் என்ஜினுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

மராஸ்ஸோவின் இந்த புதிய பெட்ரோல் வேரியண்ட் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியாவில் அமலாகுவதற்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியாகும் இந்த பெட்ரோல் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்படவுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

புதிய மாசு உமிழ்வு விதி அடுத்த மாத 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அமலாகவுள்ளதால் இந்த புதிய பிஎஸ்6 கார் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம். இதற்கிடையில் புதிய மராஸ்ஸோ பெட்ரோல் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

இந்த சோதனை காரில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜின் கடந்த மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

இந்த பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் எம்ஸ்டாலியன் பெட்ரோல் என்ஜினை 1.2 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் என்ற இரு தேர்வுகளில் மராஸ்ஸோ பிஎஸ்6 காரில் வழங்கவுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

இத்தகைய தேர்வுகள் அடுத்த தலைமுறை தார் மற்றும் ஸ்கார்பியோ கார்களிலும் வழங்கப்படவுள்ளன. இந்த என்ஜின், டர்போ பெட்ரோல் நேரடி இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பம் மற்றும் ஓவர்பூஸ்ட் செயல்பாடுகளை பெற்றுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் மட்டுமின்றி இந்த எம்ஸ்டாலியன் என்ஜின் ஃபோர்டு மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு வாகனங்களிலும் பொருத்தப்படவுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

தற்சமயம் விற்பனையாகி செய்யப்பட்டு வரும் மராஸ்ஸோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தி வருகிறது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

கூடுதல் என்ஜின் தேர்வை தவிர்த்து தற்போது சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 பெட்ரோல் வேரியண்ட் காரில் டிசைன் மற்றும் தொழிற்நுட்பங்களில் எந்த அப்டேட்டையும் எதிர்பார்க்க முடியாது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

பாடி-ஆன்-ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாகப்பட்டு வருகின்ற மராஸ்ஸோ மாடலின் என்ஜினானது ஆற்றலை முன்புற சக்கரங்களுக்கு வழங்குகிறது. அதிக எடை கொண்ட ஏணி-ஆன்-ஃப்ரேம் வாகனங்கள் போல் இல்லாமல், மராஸ்ஸோ எம்பிவி கார் மோனோக்கோயூ வாகனத்திற்கு இணையான எடையை கொண்டுள்ளது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

இதனால் மராஸ்ஸோ மாடலை முன்னோக்கி செலுத்துவது மட்டுமில்லாமல் பின்னோக்கி செலுத்துவதும் எளிது. இந்த கார் எடை குறைவாக இருப்பதற்கு காரணம், மராஸ்ஸோ எம்பிபி காரானது 52 சதவீதம் அதிக இழுவிசை கொண்ட உலோகத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காரின் மொத்த எடை குறைவது மட்டுமில்லாமல் காரின் பாதுகாப்பும் மேம்படுகிறது.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

மராஸ்ஸோ மாடலின் அனைத்து வேரியண்ட்களும் இரு முன்புற காற்றுப்பைகள், பயணிகள் காற்றுப்பை ஆஃப்-ஸ்விட்ச், இபிடியுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ப்ரேக் அசிஸ்ட், காரின் வேகத்தை அறிந்து லாக் மற்றும் அன்லாக் ஆகும் உணர்வுள்ள கதவுகள் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தைக்கான இருக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளன.

முதன்முறையாக மஹிந்திரா மராஸ்ஸோ பிஎஸ்6 கார் பெட்ரோல் என்ஜினுடன் சோதனை..!

இந்த எம்பிவி காரின் டாப் வேரியண்ட்களுக்கு மட்டும் க்ருஸ் கண்ட்ரோல் மற்றும் பின்புறம் பார்க்க திரையுடன் கேமிரா உள்ளிட்டவை கூடுதல் அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Source: Cardekho

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Marazzo petrol launching soon details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X