மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் 7 சீட்டர் மாடல் என்ற மதிப்புடன் விற்பனையில் சிறந்து விளங்குகிறது மஹிந்திரா எக்ஸ்யூவி500. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் விலை என அனைத்திலும் சிறந்த மதிப்பை வழங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த எஸ்யூவிக்கான விலை விபரம் வெளியிடப்பட்டு, ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டு நடந்து வருகிறது. லாக் டவுன் முடிந்த பின்னர் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

மேலும், ஆன்லைன் புக்கிங் துவங்கப்பட்டபோதே, இந்த காரின் முக்கிய விபரங்கள் அடங்கியை குறிப்பேடும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு வர இருப்பது தெரிய வந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

இந்த எஞ்சின் 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என்று குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

ஆனால், தற்போது குறிப்பேட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக டீம் பிஎச்பி வெளியிட்டுள்ள செய்தி மூலமாக தெரியவந்துள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விபரங்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

அதாவது, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சப்ளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்குவதை தற்காலிகமாக மஹிந்திரா ஒத்தி வைத்திருப்பதாக கருதப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலில் w5, W7, W9, W11(O) ஆகிய மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளும், ஆட்டோமேட்டிக் மாடலானது W7, W9 மற்றும் W11(O) ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் எல்இடி விளக்குகள், டியூவல் டோன் அலய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என எக்கச்சமான வசதிகள் உள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 ஆட்டோமேட்டிக் மாடல் வருகையில் தாமதம்?

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 பிஎஸ்6 மாடலானது க்ரிம்சன் ரெட், வல்கனோ பிளாக், ஒபுலென்ட் பர்ப்புள், மூன்டஸ்ட் சில்வர், மிஸ்ட்டிக் காப்பர், பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரூ.13.18 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து சென்னையில் கிடைக்கும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to report, Mahindra XUV500 BS6 automatic model launch would be delayed due to supply chain issues in India.
Story first published: Thursday, May 14, 2020, 18:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X