அட்ராசக்கை... மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

பண்டிகை காலத்தையொட்டி, மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சேமிப்பு பெற முடியும் என்ற விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

நவராத்திரி, தந்திராஸ், தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்கள் புதிய கார் வாங்குவதற்கான திட்டத்துடன் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சமயத்தில் கார் வாங்குவதை இந்தியர்கள் அதிக மகிழ்ச்சியை தருவதாக எண்ணுகின்றனர்.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

பண்டிகை கால ஆஃபர்

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிடும் வாடிக்கையாளர்களை குறிவைத்து கார் நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை வழங்குகிறது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா கேயூவி100NXT

மஹிந்திரா கேயூவி100NXT எஸ்யூவி மீது ரூ.60,00க்கும் மேல் சேமிப்பு பெற முடியும். ரூ.33,055 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது. ரூ.4,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.5,000 இதர சேமிப்புச் சலுகைகளாகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவிக்கு ரூ.20,550 வரை சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.6,550 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.4,00 கார்ப்பரேட் போனசாகவும் பெறும் வாய்ப்பு உள்ளது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவிக்கு ரூ.40,000 வரையில் சேமிக்கும் வாய்ப்புள்ளது. ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ எஸ்யூவிக்கு ரூ.41,000 வரை சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது. கார்ப்பரேட் போனஸாக ரூ.6,000 வரையிலும், இதர சேமிப்புச் சலுகைகளாக ரூ.5,000 வரையிலும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.60,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்புள்ளது. ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.10,000 வரை இதர சேமிப்புச் சலுகைகளாகவும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு ரூ.60,000 வரை சேமிக்க முடியும். இந்த எஸ்யூவியை வாங்குவோருக்கு ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், பழைய காரை மாற்றி புதிய எக்ஸ்யூவி500 எஸ்யூவி வாங்குவோருக்கு ரூ.25,000 கூடுதல் மதிப்பாகவும் பெறலாம். ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.10,000 இதர ஆஃபர்களும் வழங்கப்படுகிறது.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மீது அதிகபட்சமாக ரூ.3,06 லட்சம் வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. இதில், ரூ.2.20 லட்சம் நேரடி தள்ளுபடியாகவும், ரூ.16,000 வரை கார்ப்பரேட் போனஸாகவும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.20,000 வரை இதர சலுகையாகவும் பெற முடியும்.

மஹிந்திரா எஸ்யூவிகள் மீது ரூ.3 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகள்!

மேலும் விபரங்களுக்கு...

இந்த மாதம் புதிய மஹிந்திரா கார்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆஃபர்கள் குறித்த முழுமையான விபரங்களுக்கு அருகாமையிலுள்ள மஹிந்திரா டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். புதிய தார் எஸ்யூவிக்கு எந்த சிறப்புச் சலுகைகளும் இப்போது இல்லை.

Most Read Articles

English summary
Mahindra is offering huge discount and special savings schemes of it's entire car models ahead of festive season.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X