மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்

மஹிந்திரா எக்ஸ்யூவி300 டர்போ பெட்ரோல் மாடல் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயம் தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சந்தையில் கடும் போட்டி நிலவி வருவதால், கூடுதல் மதிப்பை வழங்குவதற்கான முயற்சிகளில் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

அந்த வகையில், எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் அதிக சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை வழங்குவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த மாடல் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

கொரோனா பிரச்னையால் சில மாதங்கள் தள்ளிப் போனாலும், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலானது இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படாது என்பது தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

எனவே, ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுதான் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 109 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் வழங்கப்படும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

இந்த நிலையில், புதிதாக வர இருக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 128 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும். தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி300 பெட்ரோல் எஞ்சினைவிட புதிதாக வர இருக்கும் இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 19 பிஎச்பி பவரை கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். பின்னர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மூலமாக இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக முன்னிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஸ்போர்ட்ஸ் மாடல் வருகையில் தாமதம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 1.2 லிட்டர் எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுக்கு விலையும் சற்று கணிசமாக நிர்ணயிக்கப்படும். இதனைத்தொடர்ந்து, எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ரஷ்லேன் தள செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
According to report, Mahindra is planning to delay the launch of XUV300 Sportz Turbo by next year.
Story first published: Monday, July 27, 2020, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X