ஸ்கார்பியன்-ஆக மாறும் மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா!! முழு தகவல் உள்ளே...

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் ஸ்கார்பியன்-ஆக மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்மிக்க கார் மாடல்களில் ஸ்கார்பியோ மாடலும் ஒன்று. இந்த காரின் புதிய தலைமுறை மாடலையே இந்தியர்களுக்காக மஹிந்திரா உருவாக்கி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, இதன் பெயரிலும் லேசான மாற்றத்தை அது மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

இதன்படி முன்னதாக வெளியாகிய தகவல்கள் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ ஸ்டிங் எனும் பெயிரிலேயே இக்காரை களமிறக்க இருப்பதாக தெரிவித்தன. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்கார்பியோஎன் (ScorpioN) எனும் பெயரில் களமிறக்க இருப்பதாக தெரிவிக்கின்றன. இது மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

மஹிந்திரா நிறுவனம் இப்பெயருக்கான டிரேட்மார்க்கை பதிவு செய்ததன் அடிப்படையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. 'என்' என்பது ஸ்கார்பியோ காரின் புதிய சூப்பர் பவர் திறனைக் குறிக்கின்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் இத்தகவல்களால் புதிய தலைமுறை ஸ்கார்பியோ 'ஸ்டிங்' எனும் பெயரில் விற்பனைக்கு வருமா அல்லது 'என்' எனும் பெயர் சேர்ப்புடன் வருமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் மஹிந்திரா தரப்பில் இருந்து வெளியாகத காரணத்தினாலயே இந்த குழுப்பம் நீடிக்கின்றது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மாடல்களை 'என்' லைனில் விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான தேர்வை மஹிந்திரா நிறுவனமும் அதன் ஸ்கார்பியோவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

புதிய பெயருடன் உருவாகி வருவதாக கூறப்படும் மஹிந்திரா ஸ்கார்பியோ அடுத்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் சில மாடல்களை இந்நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கார்பியனாக மாறிய மஹிந்திரா ஸ்கார்பியோ... புரியலையா... முழு தகவல் உள்ளே!

அந்தவகையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் விரைவில் புதுப்பிக்கப்பட்ட காராக விற்பனைக்கு வரவிருக்கின்றது. இக்காரையும் மஹிந்திரா நிறுவனம் வருகின்ற 2021ம் ஆண்டிலேயே விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Registered New Name For New Gen Scorpio. Read In Tamil.
Story first published: Saturday, December 26, 2020, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X