புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

கொரோனா பாதிப்பு காரணமாக, தடங்கலான புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

எஸ்யூவி தயாரிப்பில் ஸ்பெஷலிஸ்ட்டாக விளங்கும் மஹிந்திரா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தனது பிரபல மாடல்களை முற்றிலும் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதன்படி, தார் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகியவை புதிய தலைமுறை மாடல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள இந்த மாடல்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எக்கனாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி வீஜே நக்ரா," புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி500 மாடல்கள் அறிமுகம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

அவர் கூறுகையில்,"கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிட்டுபோது, தற்போது 40 சதவீதம் அளவுக்கு வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருகை தருகின்றனர். 75 சதவீதம் அளவுக்கு விசாரணைகளும் வருகின்றன. அதாவது, நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே வாடிக்கையாளர்களின் வரவும், விசாரணைகளும் அதிகரித்து வருகின்றன.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

அதேநேரத்தில், எங்களது வாகன உற்பத்திக்கான உதிரிபாகங்களை பெறுவதில் தொடர்ந்து சில தடங்கல்கள் உள்ளன. எங்களது உற்பத்தி சீரடைவதற்கு 30 முதல் 45 நாட்கள் பிடிக்கும். அதுவும், எந்த லாக்டவுனும் போடவில்லை என்றால் மட்டுமே இது சாத்தியம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

ஊரக பகுதிகளில்தான் எங்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு விற்பனை உள்ளது. கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு ஊரகப் பகுதிகளில் எங்களது கார் விற்பனை அதிகரித்து வருகிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

சீனாவிலிருந்து சில முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அதனை இந்தியாவிலிருந்து பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதாவது, 100 சதவீத இந்தியாவில் உற்பத்தியாகும் உதிரிபாகங்களுடன் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

கார் உற்பத்தியில் எழுந்துள்ள நடைமுறை சிக்கல்களால் எங்களது புதிய வாகனங்களின் அறிமுகங்கள் தள்ளிப் போகும். புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் தார் எஸ்யூவிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?

இந்த ஆண்டு பண்டிகை கால துவக்கத்திற்கு முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல்களின் அறிமுகம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராகும்போது இந்த புதிய மாடல்களை களமிறக்குவது உசிதம் என்று மஹிந்திரா கருதுகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
India auto giant Mahindra & Mahindra has announced a delay in the launch of its latest-generation XUV500 and the new Mahindra Thar off-roader. The vehicles are now expected to be launched during the third and fourth quarters of this year. The delay has been caused by the Covid-19 pandemic and the subsequent lockdown that followed.
Story first published: Monday, July 13, 2020, 14:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X