இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

மஹிந்திரா நிறுவனத்தின் நாஷிக் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 25 லட்சமாவது வாகனமாக ஸ்கார்பியோ மாடல் ஒன்று தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய மைல்கல் பயணம் குறித்து விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

1981ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வரும் மஹிந்திராவின் இந்த நாஷிக் தொழிற்சாலையில் இதுவரை சுமார் 2,10,000 கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா மாடல், எஃப்ஜே மினி பஸ் ஆகும்.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

அந்த சமயத்தில் இந்த தொழிற்சாலையில் இருந்து தினமும் 8 வாகனங்கள் வீதம் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று 700க்கும் அதிகமான மாடல்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

மஹிந்திரா நிறுவனம் மொத்தம் 34 நாடுகளுக்கு தயாரிப்பு மாடல்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் நாஷிக் தொழிற்சாலையில் ஸ்கார்பியோ, மராஸ்ஸோ, எக்ஸ்யூவி300, பலேரோ, இ-வெரிடோ, ஆம்புலன்ஸ், ஸ்கார்பியோ எஸ்சி/டிசி மற்றும் தார் வரிசை மாடல்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

25 லட்ச வாகனங்கள் தயாரிப்பு என்பது உண்மையில் பெரிய விஷயமாகும். ஆட்டோமொபைல் பயணத்தில் புதியதொரு மைல்கல்லை அடைந்திருப்பதை குறித்து மஹிந்திரா நிறுவனம் கூறுகையில், இத்தகைய சாதனையை படிப்படியாக மற்ற நிறுவனங்கள் அடைய விரும்பி வரும் நிலையில், நாஷிக் தொழிற்சாலையால் இது தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது என கூறியுள்ளது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

இந்த மைல்க்கல்லை அடைவதற்காக மட்டுமில்லாமல், குழப்பமான செயல்முறையில் இருந்த தனது தயாரிப்பு மாடல்களின் வரிசையை தற்போது 2020 ஆட்டோ எக்ஸ்போவில் க்ராண்ட்டான கண்காட்சி நடத்தும் அளவிற்கு கொண்டுவர கடந்த சில மாதங்களாக மஹிந்திரா நிறுவனம் கடுமையாக பணியாற்றியுள்ளது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தற்போது உள்ள தயாரிப்பு கார்களுடன் தனது எலக்ட்ரிக் இயக்கத்திற்கான தீர்வுகளையும் இந்நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது. இந்த வகையில் இந்நிறுவனத்தின் இரண்டு கதவுகளை மட்டுமே கொண்ட அடாம் என்ற சிறிய அளவிலான எலக்ட்ரிக் கார் காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

இதுமட்டுமின்றி, எலக்ட்ரிக் மொபைலிட்டி ப்ராண்டில் ஃபன்ஸ்ட்டர் என்ற பெயரில் வருங்கால எலக்ட்ரிக் எஸ்யூவியும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கிட்டத்தட்ட எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை காரின் எலக்ட்ரிக் வெர்சன் தோற்றத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

மஹிந்திரா எலக்ட்ரிக் ப்ராண்ட், சாங்யாங் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வேகமாக நகர்ந்து வருகிறது. இதனால் இதன் கூட்டணி நிறுவனமான சாங்யாங் மோட்டார்ஸ், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார்களை இந்தியாவில் தயாரித்து வரும் வெளிநாட்டு நிறுவனங்களை கண்டறிந்து வருகிறது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

இவி கார்களின் பிரிவில் வலுவான கால் தடத்தை பதிப்பதற்காக நீண்ட மற்றும் மாறுப்பட்ட எலக்ட்ரிக் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டங்களை தீட்டி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை சந்தைப்படுத்துவதில் இந்நிறுவனத்திற்கு பல ஆண்டு அனுபவம் உள்ளது.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

ஏனெனில் மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து இதற்கு முன்னர் எலக்ட்ரிக் மூன்று-சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பல தேர்வுகளை வழங்கக்கூடிய மாடர்னான ப்ளாட்ஃபாரத்தை இந்நிறுவனம் கொண்டுள்ளதால், தற்போது இருக்கும் மற்றொரு பிரபலமான மாடலின் எலக்ட்ரிக் வேரியண்ட்டும் இந்த வருடத்தில் அறிமுகமாகலாம்.

இதுதான் மஹிந்திராவின் 25,00,000-வது தயாரிப்பு வாகனமாகும்..!

எடுத்துகாட்டாக சூப்பர் எக்ஸ்யூவி300 என்ற பெயரில் அறிமுகமாகும் எக்ஸ்யூவி300 ரேலி கார். எக்ஸ்யூவி300 மாடலின் இந்த புதிய வேரியண்ட் காரும் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று ஸ்கார்பியோ மாடலின் அடுத்த தலைமுறை கார் அறிமுகமாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has rolled out its 25th lakh vehicle from the Nasik plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X