மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்நோக்கி உள்ள மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

கடந்த 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து, பிஎஸ்6 எஞ்சினுடன் கார்களை அறிமுகம் செய்வதில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, கார் நிறுவனங்கள் புதிய கார் அறிமுகங்களை தள்ளிப் போட்டு வருகின்றன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

எனினும், சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கார் விற்பனை மற்றும் முன்பதிவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. ஷோரூம்கள் திறக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக டெலிவிரி கொடுக்கும் பணிகளை துவங்கும் வகையில் இந்த ஆன்லைன் நடைமுறையை கையில் எடுத்துள்ளன.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து தனது கார் மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனத்தின் பிரபலமான ஸ்கார்ப்பியோ மாடலை பிஎஸ்6 தர எஞ்சினுடன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

இந்த மாடலுக்கு தற்போது முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் இணையதளத்தின் மூலமாக ரூ.5,000 முன்பணம் செலுத்தி ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலானது நான்கு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. தவிரவும், விருப்பத்தின் பேரில் அளாய் வீல்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், அலங்கா வேலைப்பாடுகள் நிறைந்த ஆக்சஸெரீகளையும் தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலில் க்ரோம் பாகங்களுடன் கூடிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

இந்த காரில் ஓட்டுனருக்கான இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, டில்ட் ஸ்டீயரிங் வீல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓவர் ஸ்பீடு அலராம், ஆட்டோ டோர் லாக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி 4,456 மிமீ நீளமும், 1,820 மிமீ அகலமும், 1,995 மிமீ உயரமும், 2,680 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியானது நபோலி பிளாக், மோல்டன் ரெட், டிசாட் சில்வர், பியர்ல் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலுக்கு புக்கிங் துவங்கியது!

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிஎஸ்6 மாடலானது ரூ.11.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. பட்ஜெட் அடிப்படையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக கூறினாலும், இது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான 7 சீட்டர் தேர்வாக அமையும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mumbai based auto manufacturer, Mahindra, has begun accepting bookings for its Scorpio BS6 models, for an amount of RS 5,000. Bookings can be made via the company's website.
Story first published: Saturday, April 25, 2020, 14:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X