வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

இந்திய எஸ்யூவி மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து பேராதரவை பெற்ற மாடலாக இருந்து வருகிறது. கம்பீரமான டிசைன் மற்றும் விலை இதற்கு வலுவான சந்தையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு அவ்வப்போது டிசைனிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மேம்படுத்தப்பட்டு வருவதால், தனக்கான இடத்தை மிக வலுவாக வைத்திருக்கிறது.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

இந்த நிலையில், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒரு புதிய வசதி அளிக்கப்படுகிறது. அதாவது, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்9 மற்றும் எஸ்11 வேரியண்ட்டுகளின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இனி ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியுடன் வர இருக்கிறது.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

இந்த தொழில்நுட்ப வசதிக்காக விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது நிச்சயம் இந்த காலத்திற்கு ஏற்ற வசதியாகவே பார்க்க முடிவதுடன், இது மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வாங்குவோருக்கு கூடுதல் மதிப்பை வழங்கும். புதிய கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்களால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த வசதியை உடனடியாக மஹிந்திரா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்11 வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, வாய்ஸ் அசிஸ்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், நேவிகேஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளன.

வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சூப்பரான வசதி மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் அறிமுகம்!

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் வருவதற்கு மேலும் பல மாதங்கள் பிடிக்கும் என்ற சூழலில், இந்த புதிய வசதியை மஹிந்திரா உடனடியாக ஸ்கார்ப்பியோ எஸ்யூவியில் வழங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு முற்பாதியில் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has updated Apple CarPlay and Android Auto features to the top-end variants of the Scorpio SUV.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X