1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

மஹிந்திரா நிறுவனம் ஆயிரம் யூனிட் கார்களை டெலிவரி கொடுக்க தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

இந்தியாவில் நாளை தீப ஒளி திருநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த நாளை முன்னிட்டு பலர் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்தவகையில், ஒரு சிலர் தங்களின் பயணத்தை அலங்கரிக்கும் விதமாக புதிய கார்களை வாங்கி வருகின்றனர்.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

அந்தவகையில், அண்மையில் அறிமுகமான மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரையும் ஒரு சிலர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக் செய்திருக்கின்றனர். அவ்வாறு புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தார் எஸ்யூவி கார்களை மஹிந்திரா நிறுவனம் டெலிவரி வழங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

இதற்காக அந்நிறுவனம் ஆயிரம் யூனிட் தார் எஸ்யூவி கார்களை தயார் செய்திருப்பதாக அந்த தகவல் கூறுகின்றது. இது ஓர் மெகா கார் டெலிவரி நிகழ்வாகும். கடந்த வாரம் 500 யூனிட் தார் எஸ்யூவி கார்களை டெலிவரி கொடுத்த நிலையில், தற்போது ஆயிரம் யூனிட்டுகளை டெலிவரி கொடுக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் இத்தனை யூனிட்டுகளை டெலிவரி வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

மஹிந்திரா தார் காருக்கான புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டி வருகின்றது. இதன் காரணமாக ஆரம்பநிலை மாடல்கள் சிலவற்றின் புக்கிங்கிற்கு மஹிந்திரா நிறுவனம் மிக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக முற்று புள்ளி வைத்தது. தொடர்ந்து, முதல் மூன்று பேஸ் வேரியண்ட்களை விற்பனைப் பட்டியலில் இருந்தும் நீக்கியது. மஹிந்திரா தார் கார் கடந்த மாதம் 2ம் தேதி அன்றே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

அறிமுகமான ஒரு சில நாட்களிலேயே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்கை அது பெற்றது. தற்போது, இக்காருக்கான ஒட்டுமொத்த புக்கிங் 21 ஆயிரம் யூனிட்டுகள் ஆகும். இது கடந்த அக்டோபர் நிலவரத்தின்படியான தகவல் ஆகும். மஹிந்திரா நிறுவனம், மாதத்திற்கு 2 ஆயிரம் யூனிட்டுகள் என்ற அளவில் தார் காரை தயாரித்து வருகின்றது.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

இதனை விரைவில் 3 ஆயிரம் யூனிட்டுகளாக உயர்த்த இருப்பதாக மஹிந்திர தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள்ளாக இந்த உற்பத்தி திறனில் மஹிந்திரா செயல்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில், முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி பணயில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

1000 கார்கள் தயார்... தீபாவளியில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவம்... ஹேப்பி தீபாவளி!!

மஹிந்திரா தார் காரின் டெலிவரி பணிகள் கடந்த 1ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றது. நம்பர் 1 தார் கார் நவம்பர் ஒன்று டெலிவரிக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இக்காரை ரூ. 1.1 கோடி மதிப்பில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஏலம் எடுத்திருந்தால் என்பது கவனித்தகுந்தது. இதைத்தொடர்ந்தே பிற வாடிக்கையாளர்களுக்கும் இக்கார் டெலிவரி கொடுக்கப்பட்டு வருகின்றது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Set To Deliver 1,000 Thar Cars To This Diwali. Read In Tamil.
Story first published: Friday, November 13, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X