Just In
- 54 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அதிகரிக்கும் ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கம்- போட்டியாக புதிய தயாரிப்பை களமிறக்கும் மஹிந்திரா-ஃபோர்டு
ஹூண்டாயின் சமீபத்திய அறிமுகமான க்ரெட்டா எஸ்யூவி காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து வெளியாகவுள்ள புதிய எஸ்யூவி மாடல் ஃபோர்டின் விஎக்ஸ்-772 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி ரக கார்கள் மீதான ஈடுப்பாடு கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தயாரிப்புகளை இந்தியாவில் சந்தைப்படுத்திவரும் அத்தனை நிறுவனங்களும் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தங்களது ஒரு தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற உறுதியில் உள்ளன.

இந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா, ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணியில் ஒரு காம்பெக்ட் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த இரு நிறுவனங்களாலும் சிறிய தோற்ற வேறுபாடுகளுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எஸ்யூவி கார், ஒரே ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகுவதால் ஒரே விதமான என்ஜின் தேர்வுகளை தான் கொண்டிருக்கும்.

இந்த நிலையில் இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய அறிக்கைகளில் கியா சொல்டோஸ் உள்ளிட்ட தற்போதைய எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ள இந்த எஸ்யூவி கார் ஃபோர்டின் விஎக்ஸ்-772 ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்படுவதால் வாகனத்தின் உயரத்தை குறைந்தது 4.4 மீட்டர்களில் எதிர்பார்க்கலாம். மேலும் இதில் இருந்து ஃபோர்டு நிறுவனம் தோற்றத்தையும், மஹிந்திரா நிறுவனம் என்ஜின் அமைப்புகளையும் கவனிக்கவுள்ளதை அறிய முடிகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் நிர்வாக இயக்குனர் பவன் கொய்ன்கா கூறுகையில், 1.2 லிட்டர், 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் உள்ளிட்ட வெவ்வேறான அளவுகளில் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின்களை ஏற்கனவே 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தோம். இவற்றில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

1.5 லிட்டர் என்ஜின் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக உருவாகும் காம்பெக்ட் எஸ்யூவிற்கும், விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய தலைமுறை எக்ஸ்யூவி500-லும் பொருத்தப்படவுள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மஹிந்திராவின் ப்ளாட்ஃபாரத்தில் தற்சமயம் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய சி எஸ்யூவியில் வழங்கப்படவுள்ளது.

இந்த புதிய சி எஸ்யூவி ஃபோர்டு நிறுவனத்தின் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கே தயாரிக்கப்படுவதாக கூறப்படுகின்றன. ஆனால் இதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவலும் இல்லை. இந்த எஸ்யூவி உடன் சேர்த்து இந்த கூட்டணியில் வெளிவரவுள்ள இரண்டு எஸ்யூவி கார்களும் டபிள்யூ601 மற்றும் டபிள்யூ605 என்ற குறியீட்டு பெயரால் குறிப்பிடப்பட்டு வருகின்றன.

தயாரிப்பு செலவை குறைக்கும் விதமாக இதில் டபிள்யூ601 எஸ்யூவி மாடலை ஃபோர்டும், டபிள்யூ605 எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனமும் தயாரிக்கவுள்ளது. மற்றப்படி இவற்றின் அறிமுக தேதி குறித்த எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை. மஹிந்திரா நிறுவனம் அடுத்ததாக புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 காரை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதனை தொடர்ந்து ஃபோர்டின் புதிய ஈக்கோஸ்போர்ட் மாடல் ‘டிராகன்' சீரிஸ் 1.5 லிட்டர் என்ஜினிற்கு மாற்றாக 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 2022ல் அறிமுகமாகவுள்ளது. 2012ல் முதன்முதலாக இந்தியாவில் அறிமுகமான ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கடைசியாக கடந்த 2017ல் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை பெற்றிருந்தது. அதற்கு பிறகு வரும் 2022ல் புதிய தலைமுறையை ஏற்கிறது.