புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

மஹிந்திரா தார் மாடலின் 2020 வெர்சன் கார் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளித்த இந்த காரில் ஹெட்லேம்ப் எல்இடி தரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

மஹிந்திரா தாரின் அடுத்த தலைமுறை கார் அதன் முன்னோடி மாடல்களான சிஜே, எம்எம்540, கிளாசிக் மற்றும் லெஜெண்ட் உள்ளிட்டவையை போன்று பிரபல மஹிந்திரா 4X4 டிசைனில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய தலைமுறை தாரில் மாடர்ன் டச் இருக்கும்.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

அந்த மாடர்ன் டச் தான், ஹலோஜென் விளக்கிற்கு பதிலாக எல்இடி தரத்தில் வடிவ வடிவிலான டெயில்லைட். இதேபோல் எல்இடி தரத்தில் ஹெட்லெட் முன்புற ஃபெண்டர்களின் மீதும் கொடுக்கப்பட்டுள்ளது. தார் மாடலின் இந்த புதிய தலைமுறை கார் அதன் முந்தைய தலைமுறை கார்களை போல் அல்லாமல் ஹார்ட்-டாப் வெர்சனிலும் கிடைக்கவுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

மேலும் 2020 தார் மாடல் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் மிகவும் பாதுகாப்பான வாகனமாக விளங்கும். இதன் காரணமாக இந்த கார் பின்புறத்தில் முன்பக்கம் பார்த்தப்படியான இருக்கைகளை பெற்றுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

இந்த அப்டேட்கள் மட்டுமின்றி ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வண்ண நிறங்களில் ஓட்டுனருக்கு தகவல் அளிக்கக்கூடிய திரை உள்ளிட்ட தொழிற்நுட்பங்களும் உள்ளன.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

அடுத்த தலைமுறை தார் மாடல் அதன் முந்தைய தலைமுறை மாடல்களின் ஏணி-ஃப்ரேம் சேசிஸின் அப்டேட் வெர்சனாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய தார் மாடலை சற்று பெரியதாக எதிர்பார்க்கலாம்.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

மஹிந்திரா நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான டியூவி300 மாடலின் சேசிஸை தான் அப்படியே கொண்டுள்ள 2020 தார் ஆஃப்-ரோட்டிற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஆஃப்-ரோட்டிற்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் இந்த புதிய தலைமுறை தார் மாடல் நகர்புற சாலைகளுக்கு ஏற்ற ஹேண்டிலிங்கையும் கொண்டுள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

இந்த புதிய தலைமுறை காரில் வழங்கப்பட்டுள்ள 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மற்றொரு தேர்வான 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி பவரை காருக்கு அதிகப்பட்சமாக வழங்கும்.

புதிய எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 மஹிந்திரா தார் சோதனை...

ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. பகுதி-நேர 4-வீல் ட்ரைவ் சிஸ்டம் நிலையாக உள்ளது. இந்த புதிய தார் மாடலின் இந்திய அறிமுகம் வருகிற ஜூன் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Indianautoblog

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2020 Mahindra Thar with LED tail lamps spied, to be launched by June
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X