அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மஹிந்திரா தார் மாடலின் இரண்டாவது தலைமுறை கார் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்பை படங்கள் மூலம் இந்த புதிய காரின் உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

ஸ்பை படங்கள் மட்டுமின்றி வெளியாகியுள்ள சோதனை ஓட்ட வீடியோவில் தாரின் இந்த இரண்டாம் தலைமுறை காரில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் எதுவும் கசிந்துவிட கூடாது என்பதற்காக முழுவதும் மறைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இருப்பினும் இந்த புதிய காரில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்ககூடிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது.

மேலும் மஹிந்திரா டியூவி300 மாடலில் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான் இந்த புதிய காருக்கு பொருத்தப்பட்டிருப்பதும் நமக்கு தெரிய வருகிறது. இந்த புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், டிஜிட்டல் திரை அமைப்புடன் இரு அனலாக் டயல்ஸை மத்தியில் கொண்டிருக்கிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இவை மட்டும் இல்லாமல் தற்போதைய மாடலை விட ப்ரீமியமான தோற்றத்தை, ஏசியின் காற்றை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக வழங்கப்பட்டுள்ள FATC (முற்றிலும் ஆட்டோமேட்டிக்காக தட்பவெப்ப நிலையை கண்ட்ரோல் செய்யும் யூனிட்) இந்த புதிய தார் மாடலுக்கு கொடுக்கிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

காரின் உட்பகுதியில் கியர்ஷிஃப்ட் லிவரும், 4x4 ஷிப்ட் லிவரும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட தடிமனான தலை பகுதியை புதியதாக பெற்றுள்ளன. காரின் ஸ்டைலுக்கு ஏற்ற விதத்தில் ஃபோல்டிங் சாவி வழங்கப்படுகிறது. இவை மட்டுமின்றி க்ரூஸ் கண்ட்ரோலையும் இந்த 2020 மாடல் கார் பெற்றுள்ளது.

Most Read:நல்ல மனுஷன்யா... தமிழக மக்களின் மனங்களை வென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்... என்ன செய்தார் தெரியுமா?

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

உட்புறத்தை போல் இந்த காரின் வெளிப்புற பாகங்களும் சில மாற்றங்களை ஏற்றுள்ளன. இந்த மாற்றங்களில் மிகவும் கவனிக்கத்தக்கது காரின் பரிமாண அளவு. தற்போதைய தார் மாடலை விட இந்த கார் அளவில் பெரியதாக காட்சியளிக்கிறது. மிக விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த 2020 தார் மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இந்த கார் பெறவுள்ளது.

Most Read:ஸ்கோடா நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான புதிய அறிமுக கார்கள் இவைதான்..!

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

மற்ற முக்கிய பாகங்களாக ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், பார்க்கிங் சென்சார்ஸ் மற்றும் இரண்டு காற்றுப்பைகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. தற்சமயம் மஹிந்திரா தார் மாடல் ரூ.9.60 லட்சத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய தார் மாடல் ரூ.10.75 லட்சத்தில் இருந்து ரூ.12.50 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read:2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எம்ஜி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள 4 புதிய எஸ்யூவி கார்கள் இதோ!

அறிமுகத்திற்கு முன்னதாக 2020 மஹிந்திரா தார் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மாடல் லைஃப் ஸ்டைல் வாகனமாக திகழ்கிறது. இதனால் இந்த காரை ஆப்-ரோட்டிற்கு பயன்படுத்துபவர்களுக்கு இணையாக பொது சாலை உபயோகிப்பாளர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்த 2020 காரின் அறிமுகம் விரைவில் நடைபெறவிருக்கின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Courtesy: Automobile Enthusiast's/YouTube

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Spy Pics: 2020 Mahindra Thar Spotted Testing Again Ahead Of India Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X