மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

மஹிந்திரா தார் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்தது முதலே மிகப்பெரிய அளவிலான வரவேற்பை புதிய தார் எஸ்யூவி பெற்றிருக்கிறது. முற்றிலும் புதிய மாடலாக அளவில் பெரிய மாடலாகவும், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் வந்தததால், புக்கிங்கும் எக்கச்சக்கமாக குவிந்தது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

உற்பத்தி இலக்கை குறைவாக நிர்ணயித்ததால், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில், மஹிந்திரா நிறுவனம் தடுமாறி வருகிறது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரண்டு மாடல்களில் பல்வேறு மாற்றங்கள், வசதிகள் கொண்ட வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஏஎக்ஸ் மாடல் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், எல்எக்ஸ் மாடல் சொகுசு அம்சங்களுடன் ஆஃப்ரோடு மற்றும் சாதாரண சாலை பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

மஹிந்திரா தார் எஸ்யூவி 4 சீட்டர் மற்றும் 6 சீட்டர் மாடல்களில் கிடைத்து வந்தது. இதில், ஏஎக்ஸ் மாடலில்தான் 6 சீட்டர் வெர்ஷன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், 6 சீட்டர் தார் எஸ்யூவி விற்பனையில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

அதாவது, மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு வழங்கப்படும் விபரக் குறிப்பு கையேட்டில் இருந்து ஏஎக்ஸ் 6 சீட்டர் வெர்ஷன் நீக்கப்பட்டு இருப்பதை கார்டாக் தளம் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

முதல்கட்டமாக வந்த தகவல்களில், ஏஎக்ஸ் 6 சீட்டர் வேரியண்ட்டிற்கு அதிக டிமான்ட் இல்லாததால், விற்பனை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவல்களின்படி, 6 சீட்டர் வெர்ஷனில் பயணிகளின் பாதுகாப்பு 4 சீட்டர் அளவுக்கு இல்லை என்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

இதனாலேயே, மஹிந்திரா நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தார் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலை விற்பனையில் இருந்து நிரந்தரமாக நீக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

 மஹிந்திரா தார் 6 சீட்டர் மாடல் விற்பனையில் இருந்து நீக்கம்... காரணம் இதுதான்!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.9.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள விபரக் குறிப்பு கையேட்டு விபரங்களின்படி, ரூ.11.90 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has updated the brochure of the recently launched all-new Thar in the Indian market. The updated brochure does not mention the six-seat base-spec AX variant of the Thar SUV. Based on the earlier reports and the updated brochure, the company might have discontinued the six-seat variant permanently.
Story first published: Thursday, December 24, 2020, 13:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X