புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து சத்தமில்லாமல் திடீரென நீக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

கடந்த மாதம் 2ந் தேதி புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய மாடலைவிட தோற்றத்தில் மிகவும் பிரமாண்டமாகவும், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மாதத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் இந்த புதிய தார் எஸ்யூவியை புக்கிங் செய்துள்ளனர்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, சாதாரண பயன்பாட்டு வகை எஸ்யூவி பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆஃப்ரோடு பிரியர்களுக்கான அம்சங்களுடன் ஏஎக்ஸ் மற்றும் ஏஎக்ஸ் ஆப்ஷனல் ஆகிய மாடல்களிலும், அதிக வசதிகள் நிறைந்த குடும்பத்தினர் அனைவரும் செல்வதற்கு ஏற்ற அம்சங்களுடன் கூடிய மாடல் எல்எக்ஸ் என்ற பெயரிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

இதில், ஏஎக்ஸ் மாடலில் ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.9.80 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பெட்ரோல், டீசல் என இரண்டு தேர்வுகளிலும் இந்த ஏஎக்ஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட் கிடைத்தது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

இந்த நிலையில், தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஸ்டான்டர்டு பெட்ரோல், ஏஎக்ஸ் பெட்ரோல் மற்றும் ஏஎக்ஸ் டீசல் வேரியண்ட்டுகள் திடீரென மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஏஎக்ஸ் ஸ்டான்டர்டு பெட்ரோல் வேரியண்ட் ரூ.9.80 லட்சத்திலும், ஏஎக்ஸ் பெட்ரோல் வேரியண்ட் ரூ.10.65 லட்சத்திலும், ஏஎக்ஸ் டீசல் வேரியண்ட் ரூ.10.85 லட்சத்திலும் கிடைத்து வந்தன.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

இந்த நிலையில், இந்த மூன்று பேஸ் வேரியண்ட்டுகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதால், இனி ஏஎக்ஸ் ஆப்ஷனல் வேரியண்ட்தான் ஆரம்ப ரக வேரியண்ட்டாக இருக்கும். இந்த வேரியண்ட் ரூ.11.90 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இதனால், இந்த விலை குறைவான வேரியண்ட்டுகள் இனி விற்பனைக்கு கிடைக்காது என்று தெரிகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஸ்டான்டர்டு பெட்ரோல் எ, ஏஎக்ஸ் ஸ்டான்டர்டுஏஎக்ஸ் வேரியண்ட்டுகளானது சாஃப்ட் டாப் கூரை அமைப்புடன், பின்புறத்தில் எதிரெதிர் இருக்கை அமைப்புடைய 6 சீட்டர் மாடலாக விற்பனைக்கு வந்தது. இந்த வேரியண்ட்டுகள் உண்மையில் இனி விற்பனைக்கு கிடைக்காதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

பேஸ் வேரியண்ட்டுகள் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், மஹிந்திரா தார் எஸ்யூவி இனி ரூ.11.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. இது நிச்சயம் புதிய தார் எஸ்யூவி கனவில் இருக்கும் பட்ஜெட் பிரச்னை உள்ள வாடிக்கையாளர்களுக்கும், ஆஃப்ரோடு பிரியர்களுக்கும் சற்றே ஏமாற்றமாக அமையும்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டுகள் அதிரடியாக நீக்கம்... இனி இதுதான் ஆரம்ப விலை!

இதனிடையே, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு 20,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளதால், காத்திருப்பு காலம் பிரச்னை காரணமாக, இந்த பேஸ் வேரியண்ட்டுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. உற்பத்தி பிரச்னையால் இந்த முடிவை மஹிந்திரா எடுத்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதுதொடர்பாக, மஹிந்திரா விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has removed the Thar SUV AX and AX Std base variants from its official website.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X