குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ள புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் மஹிந்திரா தார் எஸ்யூவி புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய மாடலை உருவத்திலும், தொழில்நுட்பத்திலும் வேற லெவலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

இதனால், இந்த புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, சாதாரண வகை எஸ்யூவி பிரியர்கள், பிரபலங்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

இந்த நிலையில், வரும் அக்டோபர் 2ந் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 75வது ஆண்டு ஸ்தாபகர் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தன்று, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி விலை அறிவிப்புடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே முன்பதிவும் துவங்கப்பட உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் வீடியோ மூலமாக இது தெரிய வந்துள்ளது.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

அடுத்து எல்எக்ஸ் என்ற மாடலானது அதிக வசதிகளுடன் எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருப்போரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அதிக வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும்.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சின் 150 பிஎச்பி பவரையும், டீசல் எஞ்சின் 130 பிஎச்பி பவரையும் வழங்கும். இரண்டு மாடல்களிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்பட உள்ளது.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

அதேநேரத்தில், ஏஎக்ஸ் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இருக்காது. எனினும், ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல், இரண்டு ஏர்பேக்குகள், ரோல் கேஜ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எம்ஐடி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டயர்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை காட்டும் வசதி, தண்ணீர் புகாத வசதியுடன் மியூசிக் சிஸ்டம் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

 குட் நியூஸ்... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் புக்கிங் துவங்கும் தேதி வெளியானது

வரும் 2ந் தேதி முன்பதிவு துவங்கப்பட இருக்கும் நிலையில், அடுத்த மாத பிற்பாதியில் டெலிவிரிப் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ஸ் குர்கா மட்டுமின்றி, சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கும் இந்த புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra will be launching the new Thar SUV on October 2, 2020 and the same day bookings will be open officially.
Story first published: Monday, September 28, 2020, 10:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X