கூரையை பிய்த்துகொண்டு கொட்டும் புக்கிங்! ஆச்சரியத்தில் மூழ்கிய இந்திய வாகனத்துறை! யாருமே எதிர்பாக்கல

மஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கு முன்பதிவு எக்கசக்கமாக கிடைக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

மஹிந்திரா நிறுவனத்தின் புது வருகையாக தார் எஸ்யூவி அமைந்துள்ளது. இக்காரை அந்நிறுவனம், கடந்த 2ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதே காருக்கான புக்கிங்கும் ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

அவ்வாறு, புக்கிங் தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்களே ஆகிய நிலையில் தற்போது வரை மஹிந்திரா தார் 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவை அக்கார் பெற்றிருக்கின்றது. இது ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 தார் விற்பனையாவதற்கு சமம் ஆகும். இத்தகைய அமோக வரவேற்பினால் மஹிந்திரா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

ஏனெனில் இதுபோன்றதொரு மிகப்பெரிய வரவேற்பை மஹிந்திரா நிறுவனத்தின் எந்த காரும் இதுவரை பெற்றதில்லை. எனவேதான் இந்திய வாகன சந்தையும்கூட ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றது. எதிர்பார்த்திராத குறைந்த விலையில் மஹிந்திரா தார் விற்பனைக்குக் களமிறங்கியதே இத்தகைய அமோக வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

காரின் விலைப் பட்டியலைக் கீழே காணலாம்:

Variant AX AX OPT LX
Petrol Diesel Petrol Diesel Petrol Diesel
Std 6-Seater Soft Top ₹9.80 Lakh
6-Seater Soft Top ₹10.65 Lakh ₹10.85 Lakh
4-Seater Convertible Top ₹11.90 Lakh ₹12.10 Lakh ₹12.49 Lakh ₹12.85 Lakh
4-Seater Hard Top ₹12.20 Lakh ₹12.95 Lakh
புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

மேலே நாம் பார்த்தவைதான் மஹிந்திரா தார் காரின் விலை பட்டியல் ஆகும். அவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. இந்த குறைந்தபட்ச விலையே தார் காரை ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மிக எளிதில் நுகரக்கூடிய வாகனமாக மாற்றியிருக்கின்றது. எனவேதான் பல முன்னணி நபர்களும்கூட இக்காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

குறிப்பாக, இக்காரில் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கக்கூடிய 4X4 திறன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் எந்த மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் காருக்கு சமாளிக்கும் திறனை வழங்குகின்றது. இப்போதைய அதீத வரவேற்பிற்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

இந்த வெற்றி குறித்து மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ரா கூறியதாவது, "புத்தம் புதிய தார் காருக்கு கிடைத்து வரும் அளவுகடந்த வரவேற்பைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம். இந்த கார் லைஃப் ஸ்டைலை விரும்பும் நபர்களை மட்டுமின்றி குடும்பங்கள், பெண்கள் என அனைத்து விதமானோரையும் ஈர்க்க தொடங்கியுள்ளது....

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

...தற்போது இக்காருக்கான டெஸ்ட் டிரைவ் வசதி இந்தியாவின் 18 முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நிலையிலேயே 9 ஆயிரம் தார் கார் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருக்கின்றோம். டெஸ்ட் டிரைவ் நகர விரிவாக்கத்தின் வாயிலாக கூடுதல் வரவேற்பைப் பெற முடியும் என நம்புகின்றோம்" என்றார்.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய காருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனவேதான் புக்கிங்கில் புதிய சாதனைப் படைக்க ஆரம்பித்துள்ளது மஹிந்திரா தார். ஸ்டைல், சொகுசு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி என அனைத்திலும் தார் மிகச் சிறப்பு வாய்ந்த காராக காட்சியளிக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

இதனைக் கூடுதலாக்கும் வகையில் இன்னும் பல அலங்கார அணிகலன்களை கூடுதல் அக்சஸெரீஸாக வழங்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹெட்லேம்ப், ரியர் வியூ மிர்ரர், பனி விளக்கு, ரியர் ரெஃப்ளெக்டர், பின் பக்க சிவப்பு விளக்கு என பலவற்றை அதிக சிறப்புக் கொண்ட அம்சங்களாக கூடுதல் கட்டணத்தில் விற்பனைக்கு வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

அது மட்டுமின்றி, மழை நீரை வழித்தெடுக்கும் விஷர், ஃபூட் ஸ்டெப், பாடி டீகேல்கள், அலாய் வீல்கள் மர்றும் வீல் ரிங்குகள் உள்ளிட்டவற்றையும் மேற்கூறியவற்றின் வரிசையில் சிறப்பு அலங்காரப் பொருட்களாக வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, முந்தைய தார் காரில் இல்லாத பல்வேறு அம்சங்களை புதிய 2020 தார் காரில் மஹிந்திரா வழங்கியிருக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

குறிப்பாக, ஸ்டியரிங் வீலில் வழக்கமான கார்களில் காணப்படுவதைப் போன்ற பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது புதுவிதமான இயக்க அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இதுவரை கரடுமுரடான ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்ற மாடலாகவே இருந்த தார், தற்போது தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற காராக மாறியிருக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

எனவேதான் புதிய தார் எஸ்யூவி, மஹிந்திரா எதிர்பார்த்திராத வரவேற்பை இந்தியர்களிடத்தில் இருந்த பெற்று வருகின்றத. இக்கார் ஒட்டுமொத்தமாக இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஒன்று 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜனிலும் மற்றுமொன்று 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜினிலும் காட்சியளிக்கின்றது.

புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல...

இதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 152 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். அதே நேரத்தில் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 132 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Thar Received 9000 Bookings In 5 Days. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X