அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

2020 மஹிந்திரா தார் இதுவரை பார்த்திராத சில்வர் நிறத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

இந்த 2020ஆம் வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாகனங்களுள் ஒன்றாக வெளிவந்த முற்றிலும் புதிய மஹிந்திரா தார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

மஹிந்திராவின் கடின உழைப்பின் விளைவாக வெளிவந்துள்ள இந்த தயாரிப்பு ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வாங்குபவர்களைக் கூட கவர்ந்துள்ளது. இதனால் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, புதிய எஸ்யூவிக்கான முன்பதிவுகள் கூரையை பிய்த்து கொட்ட ஆரம்பித்துவிட்டன.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

தற்போதுவரையில் 2020 தார் 2021 மே வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சோதனை ஓட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள தார் புதிய சில்வர் நிறத்தில் காட்சியளிக்கிறது. இந்த நிறத்தில் 2020 தார் இப்போதைக்கு வழங்கப்படுவதில்லை.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

சில பாகங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தில் சில்வர் நிறத்துடன் இரும்பு சக்கரம் ஆஃப்-ரோட்டிற்கு ஏற்றவாறு வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் மஹிந்திரா நிறுவனம் வரும் மாதங்களில் 2020 தாரை புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தலாம்.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்களை சரத் சந்தம் என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவுட்டுள்ளார். 2020 மஹிந்திரா தார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு தற்சமயம் கிடைக்கிறது. இதில் புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

2.2 லிட்டர் என்ஹாவ்க் டீசல் என்ஜின் 130 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு டார்க் ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

அட, இந்த நிறத்தில் 2020 தார் விற்பனைக்கு வரவுள்ளதா? மஹிந்திராவின் அடுத்த பிளான்...

புதிய தலைமுறை மஹிந்திரா 2020 காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.9.80 லட்சத்தில் இருந்து ரூ.13.75 லட்சம் வரையில் உள்ளன. தாரை வாங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்ததால் முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கான காலத்தை அதிகரித்துள்ள மஹிந்திரா முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
All-new Mahindra Thar Spotted Testing with a New Silver Colour Option, Launch Soon
Story first published: Friday, December 18, 2020, 9:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X