Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா இந்த கார் இவ்ளே பாதுகாப்பானதா?.. இது தெரிஞ்சிருந்தா நாமும் இந்த காரை புக் செய்திருக்கலாமே...
மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் எவ்ளோ பாதுகாப்பானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கார்களில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி காரும் ஒன்று. இந்த காரை கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் அந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டுமளவிற்கு இக்கார் நல்ல விற்பனை டிமாண்டைப் நாட்டில் பெற்று வருகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையில் இக்காரின் பாதுகாப்பு திறன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இக்கார் அதிகபட்சமாக பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குளோபல் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய கிராஷ் டெஸ்டின் அடிப்டையிலேயே இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இந்த புதிய தகவலினால், மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் தார் எஸ்யூவி-யும் ஒன்றாக மாறியிருக்கின்றது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரே இதுபோன்ற அதிக ரேட்டிங்கைப் பெற்ற காராக இருந்தது. இக்கார் அதிகபட்ச ரேட்டிங்காக 5 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதனையும் குளோபல் என்சிஏபி அமைப்பே வெளியிட்டது.

இந்த நிலையிலேயே இந்தியர்களின் அதிக வரவேற்பைப் பெற்றும் காரான தார் எஸ்யூவி மாடலை குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் செய்து, அதுகுறித்த தகவலை வெளியிட்டிருக்கின்றது. இக்கார், பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என இருவர்களுக்கான பாதுகாப்பு தரத்திலும் நான்கு நட்சத்திர ரேட்டிங்கையே இக்கார் பெற்றிருக்கின்றது.

இக்காரில் இடம்பெற்றிருக்கும் இரு ஏர் பேக்குகள் முன் பக்க பயணிகளின் மார்பக பகுதி, கழுத்து உள்ளிட்ட முக்கியமான பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பினை தரும் வகையில் இருக்கின்றது. இதேபோன்று பிற உடல் உறுப்புகளுக்கும் அவசர காலங்களில் அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் சிறப்பான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது.

இதுபோன்ற காரணத்தினாலயே மஹிந்திர தார் கார் அதிகபட்சமாக நான்கு நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இக்காரை 2.0 லிட்டர் டி-ஜிடிஐ எம்-ஸ்டால்லியன் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜினில் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு வழங்குகின்றது.
இதில், பெட்ரோல் எஞ்ஜின் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடியது. இதேபோன்று, டீசல் 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.