பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா டியூவி300 சோதனை கார் ஒன்று பொலேரோவின் முத்திரையுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்கள் மட்டுமின்றி வேறு சில மாடல்களின் அப்டேட் பணிகளிலும் மஹிந்திரா நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இதில் புதிய டியூவி300-ம் ஒன்று.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

2019ஆம் வருட இறுதியில் மற்றும் 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டதால் அப்டேட் செய்யப்பட்ட டியூவி300 காரின் அறிமுகம் 2020ல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

ஆனால் கொரோனாவினால் இதன் அறிமுகம் எப்போது இருக்கும் என்பது குறித்த தகவல் கூட இன்னும் நமக்கு கிடைக்க பெறவில்லை. இந்த நிலையில் தற்போது நீண்ட மாதங்களுக்கு பிறகு புதிய தலைமுறை டியூவி300-இன் சோதனை மாதிரி பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

இது தொடர்பான இந்த ஸ்பை படங்களில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. டியூவி300 கடைசியாக 2019ஆம் ஆண்டின் மத்தியில் சில சிறிய காஸ்மெட்டிக் திருத்தல்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

இந்த அப்டேட்களில் கருப்பு க்ரோம் உள்ளீடுகளுடன் கருப்பு நிறத்தில் முன்பக்க க்ரில், சறுக்கு தட்டு (முன்பக்கத்திற்கு), கார்பன் ப்ளாக் ஃபினிஷ் உடன் திருத்தியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள், 15 இன்ச்சில் க்ரே நிறத்தில் 10-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை அடங்கின.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

இவை மட்டுமின்றி மேற்கூரையில் ஸ்பாய்லர், சக்கர வளைவு க்ளாடிங் மற்றும் மெட்டாலிக் க்ரே நிறத்தில் X-வடிவிலான கூடுதல் சக்கரத்திற்கான மூடி போன்றவற்றையும் 2019 மஹிந்திரா டியூவி300 கார் பெற்றிருந்தது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள டியூவி300-இன் சோதனை மாதிரியும் இதே கூடுதல் சக்கரத்திற்கான கவரை கொண்டுள்ளது.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

ஆனால் சோதனை மாதிரியின் பின்பக்கத்தில் பொலேரோ முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் டியூவி300-ஐ பொலேரோவாக மஹிந்திரா ரீபேட்ஜ் செய்கிறதா என்று சந்தேகிக்க வேண்டாம். ஏனெனில் பொலேரோ மஹிந்திராவின் அடையாள மாடல்களுள் முக்கியமானது.

பொலேரோ லோகோ உடன் டியூவி300 கார் சோதனை ஓட்டம்!! என்ன செய்ய இருக்கிறது மஹிந்திரா?

இதனால் மஹிந்திரா இவ்வாறான மிக பெரிய முடிவுகளை தற்போதைக்கு எடுக்க வாய்ப்பில்லை. தற்போதைய 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜினை பிஎஸ்6 தரத்தில் பெறுவது மட்டுமில்லாமல் பிஎஸ்6 1.2 லிட்டர், 4-சிலிண்டர் எம்ஸ்டாலியோன் பிஎஸ்6 டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வும் புதிய மஹிந்திரா டியூவி300 காரில் வழங்கப்படவுள்ளது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Updated Mahindra TUV300 spotted with 'Bolero' badging
Story first published: Friday, December 25, 2020, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X