கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்யூவி மாடல் ரகசிய சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

எஸ்யூவி தயாரிப்பில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் ஸ்பெலிஷ்ட் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு ரக வாரியாக பல மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், புதிய தலைமுறை தார் எஸ்யூவியை அண்மையில் மஹிந்திரா பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி பார்ப்போரை டிசைனில் கவர்ந்து இழுத்ததுடன், தொழில்நுட்ப அம்சங்களிலும் அடுத்த நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா தார் எஸ்யூவியின் வல்லமையை பரைசாற்றும் விதத்தில், வீடியோ ஒன்றை மஹிந்திரா சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.

அதில், மஹிந்திராவின் சோதனை ஓட்டக் களத்தில் வைத்து தார் எஸ்யூவியின் வல்லமைகளை காட்டும் விதத்தில் படமாக்கப்பட்டு இருந்தது. அப்போது, மஹிந்திரா தார் எஸ்யூவியின் அருகில் வைத்து ஒரு புதிய மைக்ரோ ரக எஸ்யூவியும் சோதனை செய்யப்படுவதை காண முடிகிறது.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

வடிவத்தில் மிகச் சிறியதாக இருக்கும் அந்த எஸ்யூவி அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருவதும் தெரிகிறது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு மாற்றாக இந்த புதிய மாடல் வர இருப்பதாக கருதப்படுகிறது.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

அதேநேரத்தில், மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவியைவிட விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மாருதி இக்னிஸ், டாடா எச்பிஎக்ஸ் ஆகிய மாடல்களுக்கு இது போட்டியாக இருக்கும்.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

மஹிந்திராவின் புதிய தலைமுறை கேயூவி100நெக்ஸ்ட் எஸ்யூவி மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாடலில் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் ஜி80 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 81 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

கேமரா கண்களில் சிக்கிய மஹிந்திராவின் புதிய மைக்ரோ எஸ்யூவி... அதுதான் இதுவோ?

புதிய ரக மாடலை களமிறக்கும் திட்டம் இல்லை என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. எனவே, இது நிச்சயம் புதிய தலைமுறை கேயூவி100 எஸ்யூவியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra has released a video YouTube channel that shows off the capabilities of the new generation Thar. In that video, a camouflaged micro SUV also spotted and it is beleieved next generation KUV100.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X